பற்களை எவ்வாறு சரியான முறையில் பராமரிப்பது? பல் மருத்துவ நிபுணர் கூறும் 5 Tips!
பொதுவாகவே பொன் நகைகள் கொடுக்கும் அழகைவிடவும் புன்னகை கொடுக்கும் அழகு சிறப்பானது என நமது முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கின்றார்கள்.
நமது புன்னகை அழகாக இருக்க வேண்டும் என்றால், அதில் பற்களின் ஆரோக்கியம் நிச்சயமாக முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஆஸ்டர் ஆர்.வி மருத்துவமனையின் பல் மருத்துவ நிபுணர் டாக்டர் வர்திகா குமாரி, உங்கள் புன்னகையை ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் வைத்திருக்க 5 அத்தியாவசிய பழக்கங்கள் குறித்து இன்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
தினசரி பராமரிப்பு முதல் வாழ்க்கை முறை குறிப்புகள் வரை, சிறிய மாற்றங்கள் எவ்வாறு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் விளக்குகிறார்.இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பற்களை பராமரிக்கும் முக்கிய வழிகள்
பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, விரும்பிய ஒரு ஃப்ளூரைடு அடங்கிய பற்பசையை தெரிவு செய்து மென்மையான பிரஷ் மூலம் தினமும் குறைந்தபட்சம் இரண்டு முறைகள் பல் துலக்க வேண்டும்.
அது பற்துளைகளில் இருந்து பற்களை பாதுகாக்கவும், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் துணைப்புரிகின்றது.
பற்களுக்கு இடையில் காணப்படும் அழுக்குகளை முறையாக நீக்க வேண்டியது பற்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பல் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பற்களுக்கு நடுவில் சிக்கிக்கொள்ளும் சிறிய உணவு துணிக்கைகள் தான் எனவே flossing மிகவும் முக்கியம்.
சர்க்கரை மற்றும் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்ப்பதன் மூலம் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இவ்வாறான உணவுகளை சாப்பிட்ட பின்னர் நிச்சயம் சுத்தமான தண்ணீரால் வாயை நன்றாக அலசி கழுவுவது சிறப்பு.
அதிகளில் தண்ணீர் குடிப்பதும் பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. அடிக்கடி தண்ணீர் குடிப்பதால், வாயில் பாக்டீரியா வளர்ச்சி தடைப்படுகின்றது. அதனால் வாய் துர்நாற்றத்தில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன் பற்களின் ஆரோக்கியமும் மேம்படுகின்றது.
உங்கள் பல் மருத்துவரிடம் சென்று குறைந்தது 6 மாதத்துக்கு ஒரு முறையாவது,வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வதால், சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிந்து உங்கள் பல் ஆரோக்கியத்துக்கு தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.
பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் பட்சத்தில், அது நேரடியாக ஈறுகளிக் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஈறுகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது பல்வேறு உடல் நல பிரச்சினைகளுக்கு காரணமாக அமையலாம். என பல் மருத்துவ நிபுணர் குறிப்பிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |