தாய்ப்பால் தானம்.. 30 லிட்டரை கொடுத்த நடிகரின் மனைவி- குவியும் பாராட்டுக்கள்
பிரபல நடிகர் ஒருவரின் மனைவி 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்த செய்தி இணையவாசிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷ்ணு விஷால்.
இவர் இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
விஷால் குடாவ்லா என அழைக்கப்படும் விஷ்ணு விஷால், தன்னுடைய கல்லூரி தோழியான ரஜினி நடராஜை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்யன் என்ற மகனும் பிறந்தார். சில பல கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இந்த வருடம் மீரா எனும் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
30 லிட்டர் தாய்பால் தானம்
இந்த நிலையில், ஜுவாலா தினமும் 600 மில்லி லிட்டர் தாய்ப்பாலை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கி வருகிறார். இதுவரையில் 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாய்ப்பால் குறித்த அரசு மருத்துமனையில் பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் தானம் செய்யப்படுகிறது.
பால் கொடுக்க முடியாத தாய்மார்கள் அல்லது குழந்தை பிறந்ததும் இறந்து போகும் தாய்மார்களின் குழந்தைக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு தானம் செய்வதால் பால் நன்றாக சுரக்கும் அதனை குழந்தைக்கு கொடுத்து முடிய மீதமாக இருக்கும் பாலை பெண்கள் தானம் செய்ய முன் வர வேண்டும் என்ற கருப்பொருளை இந்த விடயம் சுட்டிக் காட்டுகிறது.
இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அத்துடன் விஷ்ணு விஷாலின் இந்த முயற்சிக்கு தாய்மார்கள் பலர் பாராட்டுக்களையும் ஊக்குவிப்புக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |