Astrology: தவறியும் இவர்களை திருமணம் செய்யாதீங்க.. நட்சத்திர பொருத்தம் சிக்கல்- உங்களுக்கு எப்படி?
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவரும் தன்னுடைய இளமை பருவத்தை முழுமையாக அனுபவிக்க திருமணம் என்ற ஒன்றை செய்தே ஆக வேண்டும். இந்த புதிய பயணம் சிலருக்கு நன்மையாகவும், சிலருக்கு தீமையாகவும் அமையும்.
வேறு இரு குடும்பங்கள் திருமணம் என்ற புதிய பந்தத்தில் இணையும் பொழுது சில பழக்கவழக்கங்களில் சிக்கல்கள் வரலாம். என்ன இருந்தாலும் நீண்ட நாட்களுக்கு தம்பதிகள் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்பதே பெற்றோர்களின் அதிக பட்ச ஆசையாக இருக்கும்.
தம்பதிகளுக்குள் அன்பு, மரியாதை, புரிதல் ஆகிய மூன்று அம்சங்களும் நிலையாக இருக்க வேண்டும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் இருவரும் ஒன்றாக இணைந்து அதனை சரிச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
குடும்பமாக வாழ்வதற்கு மேற்குறிப்பிட்ட காரணங்கள் எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கான தாக்கத்தை அவர்களின் ஜாதகமும் கொடுக்கிறது. பொருத்தங்கள் சரியாக இல்லாமல் திருமணம் செய்பவர்களின் வாழ்க்கை சிக்கல்களில் முடியும் என ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில்,தவறியும் திருமணம் செய்து கொள்ளக் கூடாத நட்சத்திர பொருத்தங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
நட்சத்திர பொருத்தங்கள்
இரண்டு குடும்பங்கள் இணையும் திருமண பந்தத்தில் உள்ள இருவருக்கும் தின பொருத்தம், கண பொருத்தம், யோனி பொருத்தம், ராசி பொருத்தம், கிரக பொருத்தம், ராஜ்ஜியம், வேதைகள், நாதி பொருத்தம் ஆகியன சரியாக இருந்தால் அவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும்.
மேலும், அவர்களின் குடும்ப வாழ்க்கையில் அமைதி, வளம், ஆரோக்கியம், சந்ததி, மரியாதை, காதல் ஆகிய அனைத்தும் சரியாக அமைந்து விடும். அவர்களின் வாழ்க்கை பற்றிய கவலைகளும் குறையும்.
சேரக்கூடாத பொருத்தங்களும் அதன் பாதிப்புக்களும்
1. திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு மூலம் நட்சத்திரம் இருந்தால் அது மாப்பிள்ளையின் தந்தைக்கு பிரச்சினையை உண்டுபண்ணும். அதே போன்று மருமகளாக வரும் பெண்ணுக்கு ஆயில்யம் நட்சத்திரம் இருந்தால் அது மாமியாருக்கு பிரச்சினைகளை உண்டுபண்ணும்.
2. பெண் நட்சத்திரம் கேட்டையாக இருந்தால் அது அவருடைய மாப்பிள்ளையின் மூத்த சகோதரருக்கு பிரச்சினைகளை கொண்டு வரும்.
3. விசாகம் நட்சத்திரம் கொண்ட பெண்ணை திருமணம் செய்தால், மாப்பிள்ளையின் இளைய சகோதரருக்கு பிரச்சினைகள் வரலாம்.
இது போன்ற நட்சத்திர தோஷங்கள் ஆண்களின் நட்சத்திரத்துக்கு கிடையாது.
மிருகசீரிடம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்கள் பிறந்தவர்களுக்கு திருமண பொருத்தம் பார்க்கப்படுவது கட்டாயம். பெண் அல்லது ஆண் இந்த நான்கு நட்சத்திரங்களில் இருந்தால் அவர்கள் திருமணம் செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |