இந்த நாளில் நகங்கள் வெட்டுங்க: ஜோதிட சாஸ்திரம் கூறுவது இதுதான்
பொதுவாக உடலில் அதிகமாக பராமரிக்கப்பட வேண்டிய அங்கங்களில் நகங்களும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் தாக்கம் செலுத்தும்.
சீரான இடைவெளியில் நகங்களை வெட்டும் பொழுது அதன் அடியில் உள்ள பகுதி ஆரோக்கியமாக இருக்கும். இதனை கடைபிடிக்காத போது நகங்களில் காயங்கள் மற்றும் நோய்த் தொற்றுக்கள் கூட வரலாம்.
இவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டிய நகங்கள் நம்முடைய மனம் மற்றும் உடலுடன் தொடர்புடையது. அவை உடலுக்கும் ஆன்மாவிற்கு தொடர்பை ஏற்படுத்தும் ஒரு அங்கமாகும். வழக்கமாக நகங்கள் வெட்டும் பொழுது சாஸ்த்திரங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.
சாஸ்த்திரங்களின்படி, மாலை மற்றும் காலை வேளைகளில் நகங்கள் வெட்டுவது அசுபம் என முன்னோர்கள் அடிக்கடி கூறுவார்கள். அப்படி மீறி வெட்டினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கையாகவும் உள்ளது. சாதாரணமாக நகங்களை வெட்டும் போது சனி, ராகு போன்ற தீய கிரகங்களின் தாக்கங்களை ஏற்படுத்தும்.
சாஸ்த்திரங்களின்படி, மறந்தும் நகங்கள் வெட்டக் கூடாத நாட்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
இந்த நாட்களில் நகங்கள் வெட்டாதீங்க
ஞாயிறு | வழக்கமாக ஞாயிற்றுகிழமைகளில் தான் அநேகமானவர்கள் வீட்டில் இருப்பார்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமை பலரும் நகங்களை வெட்டி சுத்தம் செய்கிறார்கள். இந்த நாட்களில் நகம் வெட்டு அசுபம் என சாஸ்த்திரங்கள் கூறுகிறது. ஜோதிடத்தின் படி, ஞாயிறு என்பது சூரியனுக்கு ஒதுக்கப்பட்ட நாளாகும். இந்த நாட் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்ற நாளாக இருப்பதால் இந்த நாளில் நகங்களை வெட்டி சுத்தம் செய்தால் வாழ்க்கையில் மோசமான விளைவுகள் வர வாய்ப்பு உள்ளது. |
சனிக்கிழமை | ஜோதிட சாஸ்திரப்படி சனிக்கிழமை சனி பகவானுக்கான நாளாக பார்க்கப்படுகிறது.
சனியின் கர்ம பலன்கள், உழைப்பு, வலி மற்றும் துன்பத்தின் கடவுள் உள்ளிட்ட காரணங்களால் இந்த நாளில் நகம் வெட்டுவது தவறு எனக் கூறப்படுகிறது. இந்த நாளில் நகங்கள் வெட்டு பொழுது எதிர்மறையான விளைவுகள் அதிகமாக இருக்கும். |
வியாழன் | வியாழன் கிழமை வியாழனுக்கு உரிய நாளாகும். இந்த நாளானது ஞானம், வெற்றி மற்றும் ஆசீர்வாதங்களின் கடவுளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் நகங்கள் வெட்டும் பொழுது வியாழனின் ஆதரவு குறைவாக இருக்கும். உங்களின் செழிப்புக்களில் இது தாக்கம் செலுத்தும். |
செவ்வாய் | ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் கிழமை செவ்வாய் கிரகத்திற்கு உரிய நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளானது வலிமை, தைரியம் மற்றும் சாகசத்தை குறிக்கிறது. மற்ற நாட்களை விட இந்த நாளில் நகங்கள் வெட்டும் பொழுது உடலில் ஆரோக்கிய பிரச்சினைகள் வரலாம். |
வெள்ளிக்கிழமை | வெள்ளி என்பது சுக்கிரனுடன் தொடர்புடைய நாளாகும். காதல், அழகு, அழகு ஆகியவற்றின் கடவுள் வீனஸ் என சாஸ்த்திரம் கூறுகிறது. இந்த நாளில் நகங்கள் வெட்டினால் அவர்களின் அழகு மற்றும் அழகு பாதிக்கப்படும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).