இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மனைவியை இளவரசி போல் நடத்துவார்கள்... யார் யார்ன்னு பாருங்க
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரங்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் திருமணத்துக்கு பின்னர் மனைவியை ராணி போல் நடத்துவார்கள்.
அப்படி மனைவியின் ஒவ்பொரு தேவைகளுக்கும்,விரும்பங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் உன்னத குணம் கொண்ட ஆண்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கிருத்திகை
இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் காதல் மற்றும் திருமண உறவின் மீது அதீத ஆர்வமும் மதிப்பும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் திருமணத்தின் பின்னர் மனைவியை தங்களின் உலகமாகவே பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அவர்களின் மனைவியின் ஆசையை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.
அவர்கள் தங்களின் மனைவியை யாரும் குறை கூறவோ, அல்லது திட்டுவதற்கோ இடமளிப்பது கிடையாது. மனதளவில் மட்டுமல்லாமல் செயலிலும் மனைவியை இளவரசி போல், கவனித்துக்கொள்வார்கள்.
உத்திரம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே அன்பானவர்களாகவும், நேர்மை மற்றும் உண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
வாழ்க்கை துணையை தங்களின் உயிருக்கும் மேல் அன்பு செய்யும் குணம் கொண்ட இவர்கள், இயல்பாகவே திருமண பந்தத்தின் மீது அதிக மதிப்புக்கொண்டவர்களாக இருப்பார்கள்.
எந்த விடயத்தையும் ஒளிவு மறைவு இன்றி மனைவியிடம் சொல்விவிடும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். மனைவியின் சின்ன சின்ன ஆசைகளுக்கும் இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
விசாகம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மனைவி மீது தீவிரமான காதல் உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வாழ்க்கையின் அனைத்து விடயங்களையும் தங்களின் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். அதனால் மனைவியையும் தங்களை போல் நினைக்கும் இயல்பை கொண்டிருப்பார்கள்.
பிறந்த வீட்டில் இருந்ததை விட பல மடங்கு மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |