வெள்ளி காப்பு அணிவதால் பணத்தை ஈர்க்க முடியுமா? ஜோதிட விளக்கம்
பொதுவாகவே இந்து மற்றும் ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்படும் ஒவ்வொரு விடயங்களுக்கு பின்னாலும் பல்வேறு நன்மைகள் மறைந்திருக்கின்றன.
அதனை முறையாக பின்பற்றியதன் காரணமாகத்தான் நமது முன்னோர்கள் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடனும் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.
சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட பல விடயங்கள் அறிவியல் ரீதியிலும் தற்காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கையில் வெள்ளி வளையல் அணிவதனால் ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளி வனையல் கொடுக்கும் நன்மைகள்
பொதுவாக பெண்கள் கையில் வளையல் அணிவது பாரம்பரிய வழக்கம், இது மங்கலத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது.
வெள்ளியில் காப்பு அணிவதால் மனஅழுத்தம் குறைக்கப்படுவதாகவும் இது ஆன்டிபாக்டீரியல் காரணியாக செயல்பட்டு, பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு கொப்பதுடன் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் துணைப்புரிகின்றது.
உடலில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள், கெட்ட விஷயங்கள் ஆகியவற்றை வெள்ளியானது ஈர்த்துக்கொள்ளும் தன்மையை கொண்டுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் வெள்ளி சுக்கிரனுக்குரிய உலோகம் என்பதால் இதற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை இயல்பிலேயே அதிகமாக இருக்கின்றது.
வெள்ளி காப்பை பெண்கள் மற்றும் ஆண்கள் வலது கையில் அணிவதால், சந்திர பலத்தையும் அதிகரிக்கக் கூடியதாக இருக்கம். வெள்ளிக்கு பணம் உள்பட அணைத்து செல்வங்களையும் ஈர்க்கும் ஆற்றல் இயற்கையாகவே அதிகம் காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![Best Time To Walk: வழக்கத்திற்கு மாறாக நடைபயிற்சி தரும் 9 வகையான பலன்கள்](https://cdn.ibcstack.com/article/013b8bf4-6fb9-4dfe-acb9-524ef902d474/25-67b420d874b14-md.webp)