வீட்டின் கண்ணாடியை இந்த திசையில் வைத்தால் ஆபத்து- வாஸ்து நிபுணர் சொல்வது என்ன?
பொதுவாக ஒரு வீட்டில் வாஸ்து சாஸ்த்திரங்களை கடைபிடிப்பது அவசியம்.
அப்போது தான் நிம்மதி மற்றும் நேர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும். கட்டிடக்கலை, வடிவமைப்பின் பண்டைய இந்திய அறிவியலான வாஸ்து சாஸ்திரத்தின்படி நம் வீடுகளை வடிவமைக்கும்போது, ஒவ்வொரு சிறிய விவரங்களும் முக்கியமாக பார்க்கப்படுகின்றன.
பெரும்பாலும் கவனிக்காமல் விடும் சிறு விடயங்கள் கூட வீட்டின் செழிப்பில் தாக்கம் செலுத்துகின்றது. நம் வீட்டில் கண்ணாடிகளை வைத்திருக்க வேண்டிய திசை சரியாக இருந்தால் வீட்டின் எப்போதும் நேர்மறையான தாக்கம் இருக்கும்.
மனிதர்களின் உருவத்தை காட்டும் கண்ணாடிகள் ஒரு இடத்தின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு அறையின் ஆற்றல் ஓட்டத்தை பாதிக்கும் திறனையும் கொண்டுள்ளது.
அந்த வகையில் வாஸ்துவின் படி, கண்ணாடிகளை வைத்திருப்பதற்கான சரியான திசை என்ன? என்பது பற்றியும் வாழ்க்கையில் எவ்வாறு சாதகமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
சரியான திசை
வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு கண்ணாடியில் உள்ள திசை அதன் ஆற்றலையும் ஓட்டத்தையும் தீர்மானிக்கும். கண்ணாடிகள் ஆற்றலை பிரதிபலிக்கும் மற்றும் பெருக்கும் சக்தி கொண்டுள்ளது.
எனவே வீட்டில் நேர்மறையான ஆற்றலை மேம்படுத்த வாஸ்து ரீதியிலான குறிப்புக்களை பின்பற்றுவது அவசியம். கண்ணாடிகளை சரியான திசையில் வைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மாற்றும்.
1. வாஸ்துபடி, வீட்டின் வடக்கு திசையில் கண்ணாடிகளை வைப்பது நல்லது. வடக்கு திசையில் வைக்கப்படும் கண்ணாடிகள் வீட்டில் செல்வத்தை அதிகப்படுத்தும். அதே போன்று தனிப்பட்ட நபரின் தொழில் வாய்ப்புகளையும் மேம்படுத்தும் என சொல்லப்படுகிறது.
2. கிழக்கு திசையில் வைக்கப்படும் கண்ணாடிகள் வீட்டிற்குள் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கும். நல்லிணக்கம் மற்றும் உறவுகளை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளதால் வீட்டின் அமைதி மற்றும் மகிழ்ச்சி இரண்டையும் ஊக்குவிக்கும்.
3. வடகிழக்கு திசையில் கண்ணாடி வைத்தால் அது புனிதமாக பார்க்கப்படுகிறது. அதே போன்று அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் திசைகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த திசையில் வைக்கப்படும் கண்ணாடிகள் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் ஆன்மீக நலன்களையும் கொண்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |