இந்த செடி பாம்பு விஷத்தையே சில நிமிடங்களில் முறிக்குமாம்! எதுன்னு தெரியுமா..?
பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்குமே ஒரு இனம் புரியாக பயம் ஏற்படுவது இயல்பு. அதற்கு மிக முக்கிய காரணம் அவற்றின் விஷம் சில நிமிடங்களிலேயே உயிரை பறிக்கும் அளவுக்கு வீரியம் மிக்கதாக இருப்பது தான்.
பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்கு காரணம் தனது இரையை வேட்டையாடுவதற்காகவே. ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்காகவோ அல்லது கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்ல.மாறாக மனிதர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்ற அச்சதடதினால் தான்.
பெரும்பாலும் வயல்களில் தொழில்புரியும் விவசாயிகள் பாம்புகடிக்கு அதிகம் இலக்காகும் நிலை காணப்படுகின்றது.
உயிரை பறிக்கும் பாம்பின் விஷத்தை கூட சில நிமிடங்களிலேயே முறிக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்ட தாவம் இருக்கின்றது என்றார் உங்களால் நம்ப முடிகின்றதா?
இந்த தாவரம் விஷத்தை முறிக்குமா?
ஆம், ஆயுர்வேதத்தில் இந்த தாவரம் 'ககோரா' ('Kakora') என்று குறிப்பிடுகிறது. இது சில பகுதிகளில் 'கண்டோலா' அல்லது 'கட்ரோல்' என்றும் அறியப்படுகின்றது.
அந்த தாவரம் தமிழில் 'பலுவக்காய்' என அழைக்கப்படுகின்றது. குறித்த தாவரம் கொதுவாக வெப்பமான மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் வளரும் தன்மை கொண்டதாகும்.
இது பெரும்பாலும் வயல்கள், புதர்கள் மற்றும் காடுகளின் ஓரங்களில் எளிதாக கிடைக்கும். மேலும் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்ற இந்த தாவரம் ஒரு காய்கறியாகவும் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
ஆயுர்வேத குறிப்புகளின் அடிப்படையில், 'பலுவக்காய்' அனைத்து வகையான விஷங்களையும் முறிக்கும் ஆற்றல் கொண்டது என குறிப்பிடப்படுகின்றது.
பாம்பு கடித்த உடனேயே பாம்பின் விஷத்தை முறிப்பதற்கு இந்த தாவரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால், வெறும் 5 நிமிடங்களில் விஷத்தின் வீரியம் குறைய ஆரம்பித்துவிடும்.
இந்த மருந்து இன்னும் பல கிராமவாசிகளிடையே பிரபலமாக உள்ளதும் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
பண்டைய காலங்களிலிருந்து, கிராமப்புற மக்கள் பாம்பு விஷத்திற்கு மட்டுமல்ல, தேள் மற்றும் பிற விஷப் பூச்சிக் கடிகளுக்கும் சிறந்த விஷ முறிப்பானாக இந்த தாவரத்தை அரைத்து பாலில் கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
முக்கிய குறிப்பு: பாம்பு கடிக்கு இந்த வீட்டு வைத்தியம் முதலுதவிக்கு மட்டுமே. மருத்துவச் சிகிச்சைக்கு மாற்றாகக் அதனை பயன்படுத்துவது சில நேரங்களில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு பாம்பு விஷமும் வேறுபட்ட தன்மையுடையவை எனவே, பாம்பு கடித்ததால், உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டியது இன்றியமையாதது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |