மழைநீர் செல்போனுக்குள் போய் விட்டதா? அப்போ இந்த தவற மட்டும் செஞ்சிடாதீங்க
தற்போது Smart phone-கள் மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
சிலர் எங்கு சென்றாலும் Smart phone-ஐ கையிலே வைத்திருப்பார்கள்.
அப்படி வைத்திருக்கும் பொழுது தவறுதலாக தண்ணீருக்கு விழ வாய்ப்பு உள்ளது.
கை தவறி உங்கள் Smart phone தண்ணீருக்குள் விழுந்து விட்டால் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதனை மீட்டெடுக்க பல வழிகள் உள்ளன.
அந்த வகையில், உங்கள் Smart phone தண்ணீருக்குள் விழுந்து விட்டால் உடனடியாக செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மொபைலை மீட்டெடுக்கும் டிப்ஸ்
1. உங்களுடைய Smart phone தவறுதலாக தண்ணீருக்குள் விழுந்து விட்டால் விரைவாக அந்த இடத்தில் இருந்து மேலே எடுக்கவும். அப்போது பெரிதாக சேதம் இருக்காது. தொலைபேசி தண்ணீருக்குள் இருந்த நேரத்தை கணக்கில் வைத்து கொண்டு, பதற்றமடையாமல் விரைந்து செயற்பட வேண்டும்.
2. சில சமயங்களில் தவறி தண்ணீருக்குள் Smart phone விழுந்த பின்னரும் ON-ல் இருக்கும். அதனால் தண்ணீருக்கு விழுந்தவுடன் வெளியில் எடுத்து Off செய்ய வேண்டும். இன்னும் சிலருடைய Phone screen கருப்பு நிறமாகிவிட்டாலோ அல்லது அது ரீஸ்டார்ட்-ஆவது போல் தெரிந்தாலோ அதனை ON செய்ய முயற்சிக்காமல் இருப்பது நல்லது. தவறும் பொழுது எலெக்ட்ரிக்கல் கரண்ட் ஷார்ட் சர்க்யூட் ஏற்படலாம்.
3. Smart phone-களை அழகுப்படுத்துவதற்காக பொறுத்தப்பட்டிருக்கும் எக்ஸ்டர்னல் காம்போனன்ட்ஸ்களை கழற்றி தனியாக எடுக்க வேண்டும். அந்த பாகங்களை காற்றோட்டமாக இருக்கும் இடத்தில் வைக்கவும். அதனை தவிர்த்து ஏதேனும் கேபிள்கள், ஹெட்ஃபோன்ஸ் அல்லது அக்சஸரீஸ்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அவற்றை அகற்றி விட வேண்டும்.
4. தண்ணீருக்குள் விழுந்த போன்களை தனியாக பிரித்து வைத்து விட்டு உலர்ந்த மற்றும் தண்ணீரை உறிஞ்சக்கூடிய துணியை பயன்படுத்தி துடைக்கவும். அதிலும் குறிப்பாக போர்ட்ஸ், ஸ்பீக்கர்ஸ் மற்றும் பட்டன்கள் அதிகமான கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். தொலைபேசிக்குள் இருக்கும் ஈரப்பதன் மற்ற இடங்களுக்கு பரவும். அதனால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |