சமந்தாவின் 100g புரோட்டீன் ரகசியம்.. இது தெரியாமல் போச்சே..!
நடிகை சமந்தா ரூத் பிரபு அவருடைய டயட் பிளான் குறித்து பேசிய காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக இருக்கும் நடிகை சமந்தா, நோயிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இது குறித்து அவர் பல பேட்டிகளில் ஓபனாக பேசியிருக்கிறார்.
அப்படி பேசிய ஒரு காணொளியில் அவருடைய டயட் பிளான் என்ன என்பதையும், அவருடைய எடையை எப்படி பராமரிக்கிறார் என்பதையும் விளக்கமாக கூறியிருக்கிறார். அதே போன்று அவருடைய ஊட்டசத்து நிபுணரும் பெண்களுக்கு தேவையான ஒருசில விடயங்கள் குறித்து பகிர்ந்துள்ளனர்.
சமந்தாவின் 100கிராம் ரகசியம்
அதாவது, “பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். புரதச்சத்து உடலுக்கு அவசியம் தேவை என பலரும் பேசுகிறார்கள். ஆனால் அதன் வேலையை குறித்து யாரும் பெரிதாக பேசுவதில்லை.
புரதச்சத்த சரியாக இருந்தால் உங்கள் உடலின் ஆற்றல், தசை ஆரோக்கியம், மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆரோக்கியமாக இருக்கும். நடிகை சமந்தாவை பார்க்கும் பொழுது ஒரு நாளைக்கு 100 கிராம் அளவிவான புரதச்சத்தை எடுத்துக் கொள்கிறார். அதனால் தான் அவர் சீரான உடையில் இருக்கிறார்.
சராசரியாக 55–60 கிலோ எடையுள்ள இந்தியப் பெண்களுக்கு எவ்வளவு புரதம் தேவை என்பதில் கவனம் இருக்க வேண்டும். உதாரணமாக 55–60 கிலோ எடையுள்ள சராசரி இந்தியப் பெண்களுக்கு 60–80 கிராம் புரதம் தேவைப்படுகிறது.
சரியான உணவு பழக்கங்க்ள வைத்திருப்பவர்கள் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வாழ்வார்கள். அதே சமயம் புரதப் பொடி உணவில் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால் 80 கிராம் வரை அடைவது மிக எளிது.
இது மட்டும் செய்யாதீங்க!
புரத உணவுகளில் கவனம் செலுத்த முன்னர் குடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடல் சுத்திகரிப்பை முடிந்த பின்னர் குடல் புறணியை மீண்டும் உருவாக்க இது உதவியாக இருக்கும். அப்போது தான் புரதத்தின் திறனை உங்கள் குடல் தாங்கும்.
பலவீனமான குடல் இருந்தால் "நெருப்பில் எண்ணெயைச் சேர்ப்பது" போன்று வீக்கம் வயிற்றில் உப்புசம் போன்ற பிரச்சினைகள் வந்து விடும். மலச்சிக்கல் கூட குடல் ஆரோக்கிய குறைபாடாகும். குடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் முக்கியம்..” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |