பொது இடங்களில் தவறியும் இந்த விடயங்களை செய்யாதீங்க... பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்
நவீன விஞ்ஞானம் விண்ணை முட்டும் அளவு வளர்ந்து விட்டது. அறிவியல் துறை நாளுக்கு நாள் வியப்பூட்டும் பல கண்டுப்பிடிப்புகளை கொடுத்துகொண்டு தான் இருக்கின்றது.
தற்காலத்ததை பொருத்த வரையில் தெரியாது என்ற பேச்சிக்கே இடமில்லாத அளலுக்கு தொழிநுட்ப வளர்ச்சியும் சமூக வளைத்தளங்களின் பெருக்கமும் அதிகரித்து விட்டது.
என்றாலும் கூட இன்னும் சிலருக்கு பொது இடத்தில் என்ன செய்ய வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து சரியான புரிதல் இருப்பதில்லை.
அப்படி பொது இடங்களில் தவறியும் ஒருபோதும் செய்யவே கூடாத முக்கிய விடயங்கள் தொடர்பிலும் அதனால் ஏற்படும் பாதகமான பின்விளைவுகள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பொது இடங்களில் தவிர்க்க வேண்டியவை
பொது இடங்களிலும் அந்நியர்களின் மத்தியிலும் இருக்கும் போது தவறியும் உங்களின் வருமானம் மற்றும் சொந்த பிரச்சினைகள் பற்றிய விடயங்கள் குறித்து எதுவும் பேசவே கூடாது.
இது பேசும் நேரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத போதிலும் பின்னர் ஆவண திருட்டு கொள்ளை சம்பவங்கள் போன்ற பலவற்றுக்கு காரணமாக அமையும்.
மேலும் சொந்த பிரச்சினைகள் தொடர்பில் மற்றவர்களிடம் பகிரும் பழக்கம் எப்போதும் உங்களுக்கு பாதிப்பையே கொடுக்கும்.
மக்கள் பொது இடங்களில் உங்கள் தொலைப்பேசியில் சத்தமாகப் பேசுவதை ஒருபோதும் செய்யவே கூடாது. இது மற்றவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி உங்கள் மீதான சமூக மரியாதையையும் குறைத்துவிடும்.
பொதுவெளியில் தவறியும் யாருடனும் சண்டை போட கூடாது. இது முற்றிலும் பாதுகாப்பற்ற சூழலை உங்களுக்கு கொடுக்கும். மேலும் மற்றவர்களின் அமைதிக்கும் இது பெரும் பாதிப்கை ஏற்படுத்தும். இதனால் எதிர்காலத்தில் வேறு சில பிரச்சினைகள் உங்களை தேடிவரும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
மிக முக்கியமாக பொது இடங்களில் அல்லது வீதியோரங்களில் சிறுநீர் கழிப்பதையும் எச்சில் துப்புவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது பல்வேறு தொற்றுநோய்கள் பரவுவதற்து முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |