premenstrual syndrome: மாதவிடாய் முன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? காரணங்களும் தீர்வுகளும்

Periods Disease
By Vinoja Jan 06, 2025 01:56 PM GMT
Report

பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிகவும் சோர்வாக உணர்வார்கள். மாதவிடாயின் போது உடலில் ஏற்படும் ஹேர்மோன் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் ஒவ்வொரு மாதமும் ஓர் இரு நாட்கள் மாற்றம் ஏற்படுவது இயல்பான விடயம் தான்.

premenstrual syndrome: மாதவிடாய் முன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? காரணங்களும் தீர்வுகளும் | Premenstrual Syndrome Symptoms In Tamil

ஆனால் பத்து நாட்களுக்கு மேல் தள்ளிப்போதல், ஒரே மாதத்தில் இரண்டு முறை வருதல் போன்ற பிரச்சினைகளை உடனே கண்டறிந்து உரிய வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

male infertility symptoms: ஆண்களே உங்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை!

male infertility symptoms: ஆண்களே உங்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை!

மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்த காலத்தில் பெண்களுக்கு உணவின் மீது நாட்டம் குறைவாகவே இருக்கும்.

premenstrual syndrome: மாதவிடாய் முன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? காரணங்களும் தீர்வுகளும் | Premenstrual Syndrome Symptoms In Tamil

ஆனால் மாதவிடாய் காலத்தில் தான் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளைச் உட்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும், உடல் அமைப்பு மற்றும் மாதவிடாய் கால வலிகளும் மாறுபடக்கூடும்.

பொதுவாக பெண்களில் மாதவிடாயானது ஒவ்வொரு மாதமும் 3 முதல் 7 நாட்கள் வரையில் நீடிக்கும். ஆனால் மாதவிடாய் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே உடலில் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிடும்.

premenstrual syndrome: மாதவிடாய் முன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? காரணங்களும் தீர்வுகளும் | Premenstrual Syndrome Symptoms In Tamil

மருத்துவ ரீதியில் இது மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறி (premenstrual syndrome)என குறிப்பிடப்படுகின்றது.

இது மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு ஒரு பெண்ணின் உடலில் நிகழும் மாற்றங்களையே குறிப்பிடுகின்றது.

அந்த வகையில் மாதவிடாய் வருவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் மனநிலை, உணர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நடத்தையில் ஒரு சில மாற்றங்கள் ஏற்ப்டும். 

premenstrual syndrome: மாதவிடாய் முன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? காரணங்களும் தீர்வுகளும் | Premenstrual Syndrome Symptoms In Tamil

மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள் 

மனநிலை மாற்றங்கள்

வயிற்று உப்புசம்

ஒரு சில உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதல்

மார்பு பலூன் போல வீங்கி காணப்படுதல்

பெண்ணுறுப்பில் தாங்க முடியாத எரிச்சல் வலி 

அதிக கோபம்

சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால் எல்லா பெண்களுக்கும் இந்த அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. 

premenstrual syndrome: மாதவிடாய் முன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? காரணங்களும் தீர்வுகளும் | Premenstrual Syndrome Symptoms In Tamil

அந்த மாற்றங்களுக்கு என்ன காரணம்? 

மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மூளையில் செரோடோனின் எனப்படும் வேதிப்பொருளின் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

செரோடோனின் உங்கள் மனநிலையை சீராக்க உதவுகிறது மற்றும் உங்களை மகிழ்ச்சியாக உணர உதவுகிறது.

ஆனால் மதவிடாய் காலத்தில் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் இந்த மாற்றம் செரோடோனின் அளவைக் குறைக்க வழிவகுக்கிறது, இது மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளுடன்  தொடர்புடைய மனநிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

premenstrual syndrome: மாதவிடாய் முன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? காரணங்களும் தீர்வுகளும் | Premenstrual Syndrome Symptoms In Tamil

வாழ்க்கை முறை காரணிகளான உணவு முறை மற்றும் தூங்கும் அளவு போன்றனவும் மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளுடன் தொடர்பை கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.

சாதாரண நபர்களை விட பருமனான மக்கள் மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளிகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

மன அழுத்தம் மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளுக்கு நேரடி காரணம் அல்ல. ஆனால்  இந்த அறிகுறிகள் மன அழுத்தத்தால் மோசமடைய அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது. 

premenstrual syndrome: மாதவிடாய் முன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? காரணங்களும் தீர்வுகளும் | Premenstrual Syndrome Symptoms In Tamil

சில உணவுகளை மிகக் குறைவாகவும் மற்றவற்றை அதிகமாகவும் சாப்பிடுவது கூட மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளுடன் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றது.

 உதாரணமாக, அதிக உப்பு உணவுகள் வீக்கத்தை ஏற்படுத்தும். காஃபினேட்டட் பானங்கள் மற்றும் ஆல்கஹால் உடலின் மனநிலை மற்றும் ஆற்றல் நிலைகளை சீர்குலைப்பதாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

premenstrual syndrome: மாதவிடாய் முன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? காரணங்களும் தீர்வுகளும் | Premenstrual Syndrome Symptoms In Tamil

இந்த நேரத்தில் பெண்களுக்கு ஓய்வு மிகவும் அவசியம். மன அழுத்தத்தை குறைக்க தியானம் மற்றும் மனதுக்கு பிடித்த இனிமையான விடயங்களை செய்வது ஆறுதல் அழிக்கும்.

குறிப்பாக இந்த நேரங்களின் தான் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஆரோக்கியம் நிறைந்த உணவு முறையை பின்பற்றுதல், சிறந்த தூக்கம் போதிய ஓய்வு ஆகியன மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளின் பாதிப்புளை குறைக்க உதவுகின்றது. 

obstructive sleep apnea: தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல்... இதற்கு என்ன தீர்வு?

obstructive sleep apnea: தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல்... இதற்கு என்ன தீர்வு?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US