உலகிலேயே மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்படும் பிஸ்கட் எது தெரியுமா?
உலகில் மிகவும் அதிகமாக விற்பளை செய்யப்படும் பிஸ்கட் எது எனபதும் அது விற்பனை செய்யப்படுவதற்கான காரணம் என்னவென்பதையும் பதிவில் பார்க்கலாம்.
உலகில் அதிகமாக விற்பனையாகும் பிஸ்கட்
தற்போது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். உலகளவில் எல்லோராலும் விரும்பி சாப்பிடும் ஸ்நேக்ஸ் ஆக பிஸ்கட் இருக்கிறது.
அந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பிஸ்கட் உலக அளவில் அதிகம் விற்பனையாகி வருகிறது. எல்லோரும் பிஸ்கட்டை டீயுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர்.
இதை ஒரு பழக்கமாகவே மாற்றி விட்டனர். அந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பார்லே-ஜி Parle G பிஸ்கட்தான் உலகில் மிகவும் அதிக விற்பனையாகும் பிஸ்கட்டாக உள்ளது.

இந்த பார்லேஜி பிஸ்கட்டின் பூர்வீகம் 1920-களில் ஆரம்பிக்கிறது.அப்போது மோகன் லால் சவுகான் என்பவர் அன்றைக்கு சுமார் 60,000 மதிப்பில் பிஸ்கட் தயாரிக்கும் இயந்திரங்களை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்தார்.
அன்றைய காலத்தில் 60 ஆயிரம் ரூபாய் என்பது இன்றைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சமம் என்று கூறப்படுகிறது.
மோகன்லாலின் ஐந்து மகன்கள் மும்பை புறநகர் பகுதியில் பிஸ்கட் தயாரிக்கும் ஆலையை ஏற்படுத்துகிறார்கள்.பார்லேஜியில் 'ஜி' என முதல் பெயர் வந்ததற்கான காரணம் குளுகோஸ் என்பதை குறிப்பதற்காக எனப்பட்டது.

பின்னர் இந்த பிஸ்கட்டை விரும்புவோர் அந்த பெயருடன் ஜி என்ற உழுத்தை சேர்த்து கூற அது பார்லி ஜி எனப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் பிஸ்கட்டாக இந்த பார்லேஜி மாறியது.
மிகக் குறைந்த விலையில் நல்ல சுவையுடன் இருப்பதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இந்த பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிட்டார்கள்.
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நீல்சன் ரிப்போர்ட் தகவலின் படி உலகில் அதிகம் விற்பனையாகும் பிஸ்கட் பிராண்டாக பார்லேஜி உள்ளது.

தற்போது இந்த பிராண்ட் இன்னும் பல விற்பனை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது.
பார்லே ஜி நிறுவனத்தை உருவாக்கிய மோகன்லால் சௌஹானின் குடும்பத்துடைய சொத்து மதிப்பு இன்று சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |