குளிர்காலத்தில் பலரை தாக்கும் நோய்.. உடனடியாக மாயாஜாலம் செய்யும் மூலிகை
பொதுவாக பருவ கால மாற்றங்கள் ஏற்படும் பொழுது மனிதர்களின் உடல் அதற்கு பழகுவதற்கு முன்னர் சில அறிகுறிகளை காட்டும். அதனை கண்டுக்காமல் விடாமல் அதற்கான வைத்தியம் செய்யும் பொழுது சீக்கிரம் குணமாக்கலாம்.
உதாரணமாக, கோடைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்கும் சமயத்தில் சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. இதனை ஆரம்பத்தில் சரிச் செய்து விட்டால் பெரிதாக பிரச்சினை வராது.
அதிலும் குறிப்பாக குளிர்காலம் வந்து விட்டால் சிலருக்கு மன அழுத்தம் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. இதற்கு வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்து வீட்டு வைத்தியம் அல்லது பாட்டி வைத்தியம் செய்யலாம்.
இது உங்கள் அழுத்தங்களை குறைத்து சந்தோஷமாக வைத்துக் கொள்ளும். சிலருக்கு குளிர்காலம் ஆரம்பிக்கும் பொழுது உயர் ரத்த அழுத்தம் அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கும்.
உணவு பழக்கங்களில் மாற்றம், காலநிலையில் மாற்றம், வெப்ப நிலையில் மாற்றம் உள்ளிட்ட மாற்றங்கள் இயற்கையாக நடக்கும் சமயத்தில் உடல் அதனை ஏற்றுக் கொள்ளும் போது சில நோய்களை ஏற்படுத்தி விடுகிறது.
இது போன்று வேறு என்னென்ன பிரச்சினைகள் குளிர்காலத்தில் வரும் என்பதையும், அதனை எப்படி பாட்டி வைத்தியத்தை வைத்து சரிச் செய்யலாம் என்பதையும் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

பாட்டி வைத்தியம்
குளிர்காலத்தில் இரத்த அழுத்தம் பிரச்சினையுள்ளவர்கள் உணவு பழக்கங்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் பொழுது ஆபத்து குறைவு.
1. சர்ப்பகந்தா தெரியாமல் யாரும் இருக்கமாட்டார்கள். இதில் உள்ள ஆல்கலாய்டுகள் போன்ற பல பைட்டோநியூட்ரியண்ட்கள் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதனை மருந்துகள் தயாரிப்பதற்கு அதிகமாக பயன்படுத்துவார்கள். இதனை தண்ணீருடன் கலந்து எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்த அழுத்தம் சீராகும். சர்ப்பகந்தாவை மருத்துவ ஆலோசனையுடன் பயன்படுத்துவது சிறந்தது.

2. வெந்தயத்தில் நார்ச்சத்த அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கரைக்கும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். உணவில் உப்பை குறைத்து சாப்பிட வேண்டும். வெந்தயத்தை அப்படியே தண்ணீரில் போட்டு குடிக்கலாம் அல்லது வெந்தய பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
3. சல்பர் சேர்மங்கள் நிறைந்திருக்கும் பூண்டை சாப்பிடும் பொழுது ரத்த அழுத்தங்கள் குறைந்து, கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும். பூண்டை உணவில் கலந்து எடுத்து கொள்ளும் பொழுது அதிலுள்ள முக்கிய மூலங்கள் இரத்த நாளங்களில் நல்ல விளைவை ஏற்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |