திசை மாறும் குரு - டிசம்பர் 5 முதல் தலையெழுத்தே மாறப்போகும் 5 ராசிகள்
டிசம்பர் 5, 2025 குரு பகவானின் நிலையில் முக்கிய மாற்றம் ஏற்பட இருக்கிறது. குருவின் இந்த பெயர்ச்சி பல ராசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
குரு பெயர்ச்சி 2025
ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். குருவின் நிலையில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிகளிலும் ஏற்படும் மாற்றமாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகின்றது.
குரு பகவான் கடந்த நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் டிசம்பர் 5 2025 அவர் மீண்டும் மிதுன ராசிக்குள் நுழைவார்.
மிதுன ராசியில் அவர் மார்ச் 11, 2026 வரையில் பயணிப்பார். எனவே இந்த திசைமாறிய பெயர்ச்சி காரணமாக மொத்தம் 5 ராசிகள் நற்பலனை பெறப்போகின்றது.

மிதுனம்
- மிதுன ராசிக்கு குரு பகவான் லக்ன வீட்டில் குடியேறுகிறார்.
- இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- உங்களுடைய ஆளமை பண்பு மேம்படும்.
- உடலின் ஆரோக்கியம் சிறப்பாக இருககும்.
- பணியிடத்தில் உங்கள் திறமைகள் அங்கீகரிக்கப்படும்.
- குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி, மகிழ்ச்சி பெருகும்.
- உங்களின் தனித்திறமைகள் அதிகரிக்கும்.
சிம்மம்
- சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது வாழ்க்கையில் புதிய வெற்றிகளை கொண்டு வரும்.
- சவால்களை உடைத்து வெற்றி காண்பீர்கள்.
- நீண்ட காலமாக நிலவி வந்த தொழில் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
- பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்.
- வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும்.
கன்னி
- கன்னி ராசிக்காரர்களின் பத்தாவது வீட்டில் இந்த குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது.
- பத்தாவது வீடு தொழில் ஸ்தானமாக கருதப்படுகிறது.
- உங்கள் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் வரும்.
- சிறு தொழில் செய்தால் அது பெரிதாக வாய்ப்பு அதிகம்.
- வெளிநாடுகளுக்கும் தொழிலை கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- இணைய வழியில் தொழிலை விரிவாக்கம் செய்ய வழி வாய்ப்பு கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடித்து மகிழ்ச்சி காண்பீர்கள்.
தனுசு
- தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழாவது வீட்டில் குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது.
- ஏழாவது வீடு என்பது களத்திர ஸ்தானம் ஆகும்.
- எனவே இதுவரை திருமணமாகாமல் இருந்து வரும் தனுசு ராசிக்காரர்களுக்கு விரைவில் திருமணம் முடியும்.
- பணியிடத்தில் உங்கள் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
- உங்கள் புதிய யோசனைகள் பாராட்டப்படும்.
- உங்கள் வேலைகளை முடித்து வெற்றியைக் காண்பீர்கள்.
- எதிர்பாராத வழிகளில் இருந்து பண வரவு கிடைக்கும்.
- காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்களின் ஜாதகத்தின் ஐந்தாவது வீட்டில் குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது.
- இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்கள் எதிர்பாராத பலன்களை அனுபவிப்பீர்கள்.
- குறிப்பாக குழந்தைகள் வழியாக நல்ல செய்திகள் கிடைக்கும்.
- குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை, எதிர்காலம் அனைத்திலும் முன்னேற்றம் இருக்கும்.
- படித்து முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைககும்.
- நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும் காலமாக இது இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).