Neeya Naana: தங்கத்தில் முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா? நீயா நானாவில் விவாதம்
நீயா நானா நிகழ்ச்சியில் தங்கத்தில் தான் முதலீடு செய்வோம் என சொல்பவர்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யமாட்டேன் என சொல்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் தங்கத்தில் தான் முதலீடு செய்வோம் என சொல்பவர்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யமாட்டேன் என சொல்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.

இன்றைய காலத்தில் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் இதற்கு மறுபுறம் தங்கத்தில் முதலீடு செய்யாமல் தபால்நிலையத்தில் இருக்கும் சில திட்டத்தில் கீழ் முதலீடு செய்தால் நல்ல லாபத்தினை பெற முடியும் என்று கூறுகின்றனர்.
தங்கத்தில் முதலீடு செய்தாலும் செய்கூலி, சேதாரம் அதிகமாக செல்வதால், அதன் லாபம் குறைவாகவே இருக்கும் என்று வாதிடுகின்றனர்.
உண்மையில் இன்றைய காலத்தில் பெண்கள் தான் அணியும் நகைகளில் தான் முதலீடு செய்வதில் உறுதியாக இருக்கின்றனர்.