காதல் உறவில் Red Flag - Green Flag என்றால் என்னன்னு தெரியுமா?
பொதுவாகவே ஆண்களும் சரி, பெண்களும் சரி காதல் உறவில் தங்களுக்கு கிடைக்கும் துணை உண்மையானவராகவும், நேர்மையானவராகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
ஆனால் எல்லோருக்கும் அப்படியான துணை அமைவது கிடையாது. அனைவருமே மற்றவர்கள் நமக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று சிந்திக்கும் அளவுக்கு நாமும் மற்றவர்களுக்கு நேர்மையானவர்களாக நடந்துக்கொள்ள வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துவது கிடையாது.

காதல் உறவில் மாத்திரமன்றி நட்பு, தொழில் முறை உறவுகள் என எதிலும் ஒருவருடனான உறவை ஆழமாக்கிக்கொள்வதற்கு முன்னர் சில நடத்தைகளை வைத்து புரிந்துக்கொள்ளலாம் என Gen-Z தலைமுறையினர், காதலையும் மனிதர்களையும் பல வரையரைக்குள் கொண்டு வருகின்றனர்.
அதற்கு அவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைதான், Red Flag-Green Flag. அதன் அர்த்தம் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

Red Flag என்றால் என்ன?
காதல் உறவில் மட்டுமன்றி நட்புறவு, வேலை பார்க்கும் இடம், வீடு என நாம் யாரிடமெல்லாம் உறவை பேணுகிறோமோ, அந்த அனைத்து இடங்களிலும் சிகப்பு கொடுக்கான அறிகுறிகள் இருக்கின்றதா என்பது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
Red Flag எனும் போது, ஒரு நபரின் இருக்கும் டாக்ஸிக் ஆன குணங்களை இவை சுட்டிக்காட்டுகின்றன.

அதாவது ஒரு உறவை ஆரம்பிக்கும் போதே, ஒருவர் நம்மை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைப்பது, பல விடயங்களில் பொய் சொல்லுவது, மற்றவர்களிடம் நமக்கு முன்னாலேயே பொய் சொல்லுவது போன்ற குணங்களை குறிக்கும்.
குறிப்பாக தனி மனிதனுக்கு மரியாதை கொடுக்காமல் இருப்பது , நீ என்னவன் அல்லது என்னவள் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று அதிகாரத்தை கையில் எடுப்பது, ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தை பறிப்பது போன்ற குணங்களை கவனித்தால், அது சிவப்பு கொடியாக கருதப்படுகின்றது.

அதாவது இப்படிப்பட்ட குணங்கள் கொண்டவர்களுடன் நிச்சயம் நீண்ட காலத்துக்கு உறவை பேண முடியாது என்பதே இதன் அர்த்தம்.
Green Flag என்றால் என்ன?
ஒரு தனி மனிதரின் நேர்மறையான அணுகுமுறையை இது குறிக்கின்றது.அதாவது யாராக இருந்தாலும் அடிப்படையில் ஒரு மனிதனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுப்பது, தனது உணர்வுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை துணையின் உணர்வுகளுக்கும் கொடுக்க நினைப்பது, கட்டுபாடுகள் அற்ற அன்ழப காட்டுவது, சுதந்திரமாக வாழவிடுவது, போன்ற குணங்கள் இருந்தால், கிரீன் ஃப்ளாக் ஆக பார்க்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட மனிதருடன் நாம் நீண்ட காலத்துக்கு உறவை பாதுகாக்க முடியும் என்பதே இதன் அர்த்தம்.
எளிமையாக குறிப்பிட்டால், ரயில் வரும் போதோ அல்லது சாலையில்,சிக்னலில் நிற்கும் போதோ சிகப்பு லைட் அல்லது கொடி காண்பித்தால் முன்னேறி செல்ல மாட்டோம்.

மீறி போனால் ஆபத்து விபத்து நேரும் என்று நமக்கு தெரியும். அதுவே பச்சைக்கொடி அல்லது லைட் காண்பித்தால், தைரியமாக செல்லாம். காரணம் பாதை கிளியராக இருப்பதாக அர்த்தம்.
அதே போல் தான் உறவுகளிலும் இந்த Red Flag & Green Flag என்பது குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது.
இதனை கவனித்து ஒரு உறவில் இணைவது அந்த உறவை அழகானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |