உலகின் முதல் DMV வாகனம்: 15 விநாடிகளில் ரயிலாக மாறும் பேருந்து!
பொதுவாக உலகில் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில் பொதுபோக்குவத்தில் முக்கிய பங்கு வகிப்பது ரயில் சேவை மற்றும் பேருந்து சேவை தான்.
ஆனால் ஜப்பானில், பேருந்தையே தேவையான இடங்களில் மாத்திரம் ரயிலாகவும் பயன்படுத்துகின்றார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரயிலாகவும் இயங்கும் பேருந்து
ஜப்பானின், கொச்சியை அண்டை பிரதேசமான டோகுஷிமா மாகாணத்துடன் இணைக்கும் ஆசா கடற்கரை ரயில்வே, உலகின் முதல் "ரயில் பேருந்து” என்ற பெருமையை பெறுகின்றது.
அதாவது இரட்டை முறை வாகனங்கள் எனப்படும் Dual Mode Vehicle இங்கு பயன்படுத்தப்படுகின்றது.

இது சாலையில் பேருந்தாகவும், ரயில் பாதையில் (தண்டவாளத்தில்) ரயிலாகவும் செயல்படுகின்றது. அவை சாரையில் இருந்து தண்டவாளத்துக்கு மாறும் பொழுது வெறும் 15 வினாடிகளில் பேருந்திலிருந்து, ரயிலாக மாறி விடுகிறது. இந்த வாகனத்தில் 21 பேர் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அது கடற்கரையோர ரயில் பாதைகளில் ஓடுவதைப் பார்க்கும்போது நிச்சயமாக ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவா-கைனன் நிலையம் மற்றும் கன்னூரா நிலையம் இரண்டிலும் இந்த DMV சுவிட்ச் முறைகளைக் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |