வேகமாக பரவி வரும் ஆபத்தான Mpox வைரஸ்.... முக்கிய அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையங்கள் (ECDC) விரைவில் mpox பற்றிய புதிய ஆபத்து மதிப்பீட்டை வெளியிடும் என்று பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Mpox என்றால் என்ன?
1958 ஆம் ஆண்டு குரங்குகளிடையே இந்த நோய் தொற்று பரவ ஆரம்பித்தமை காரணமாக குரங்கு அம்மை என்று அழைக்கப்பட்டது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது.ஆனால் 2022 ஆம் ஆண்டில், mpox உடலுறவு மூலம் பரவும் நோய் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
Mpox பெரியம்மை போன்ற அதே வைரஸ் குடும்பத்தின் ஒரு அங்கம் என குறிப்பிடப்படுகின்றது.
முக்கிய அறிகுறிகள்
இந்த பாதிப்பு பொதுவாக காய்ச்சல், குளிர் மற்றும் உடல் வலிகள் உள்ளிட்ட லேசான அறிகுறிகளையே முதலில் ஏற்படுத்துகின்றது.
நோய் பாதிப்பு தீவிரமாகும் போது முகம், கைகள், மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் சீழ் நிறைந்த புண்களையும் ஏற்படுத்துகிறது.
அடிக்கடி வலி அல்லது அரிப்பு சொறி, அதிக புண்கள் போன்றன சில வாரங்கள் வரையில் தொடர்ச்சியாக நீடிப்பது குரங்கு அம்மை தொற்றின் முக்கிய அறிகுறியாகும்.
பாதிக்கப்பட்ட நபரின் தோல் புண்களுடன் நேரடியாக மற்றொருவர் தொடர்பு கொள்ளும் போது இந்த நோய் அவருக்கும் பரவ ஆரம்பிக்கின்றது.
மேலும் mpox வைரஸால் பாதிக்கப்பட்டர் இருமும் போது தும்மும்போது அவரிடமிருந்து இந்த வைரஸ் மற்றுமொருவருக்கு பரவகூடும்.
அதுமட்டுமன்றி நோய் பாதிப்ப உள்ளவரின் சுவாசத்தின் மூலமும் பரவும். குறிப்பாக பாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவு கொள்வதன் மூலம் பரவுகின்து.
இந்தியா மற்றும் இலங்கையில் இந்த நோய் தொற்றாளர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை இருப்பினும் சுகாதார நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டியது நோய் பரவுவதை தடுக்க பெரிதும் துணைப்புரியும் என்பதால் உலக நாடுகளுக்கு சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |