நெஞ்சு சளியை போக்கும் நாட்டுக் கோழி சூப்... இவ்வளவு எளிமையா செய்யலாமா?
பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அடிக்கடி சளி பிடிப்பது மற்றும் காய்சல் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கும்.
வைரஸ் தொற்றுகளை எதிர்கொள்ள உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். இந்த சளி உடலில் சேர்ந்து நெஞ்சில் கட்டிக்கொள்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிடுகிள்றது.
மருந்து மாத்திரைகள் அதற்கு தீர்வு கொடுத்தாலும் அவை தற்காலிகமானதுதான். இதனை இயற்கை வழிகள் மூலம் போக்க நாட்டு கோழி சூப் மிகச் சிறந்த தெரிவாக இருக்கின்றது.
நாட்டுக்கோழியில் கால்சியம்,பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் இவை உடலில் உள்ள எலும்புகளை வலிமையாக்குவதோடு அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
நாட்டுக்கோழி சூப் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும் நாட்டுக்கோழியில் உள்ள அமினோ அமிலம் மற்றும் புரதம் உடலில் தசை வளர்ச்சிக்கு இன்றியமையாதது.
நாட்டுக்கோழி இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. இது எலும்புகளை நீண்ட நாட்கள் வரையில் வலுவாக வைத்திருக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலங்களிலும் பிரசவத்தின் பின்னரான காலப்பகுதியிலும் நாட்டுக்கோழி சாப்பிடுவது இடுப்பு எலும்பை வலுப்படுத்த பெரிதும் உதவுகின்றது.
அதிலும் பருவ வயது பெண்கள் பிராய்லர் கோழி சாப்பிடுவது பல்வேறுவிதமான பாதக விளைவுகளை ஏற்படுத்தும் ஆனால் நாட்டு கோழி சாப்பிடுவதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இருக்காது.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அசைவத்தை தவிர்ப்பது பெரும் சவாலான விடயமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் நாட்டுக்கோழியை தாராளமாக சாப்பிடலாம்.
நெஞ்சு சளி இருப்பவர்களுக்கு நாட்டுக்கோழி சூப் அருமருந்தாகும். இத்தனை மருத்துவ நன்மைகள் நிறைந்து காணப்படும் நாட்டுக்கோழி சூப்பை அட்டகாசமான சுவையில் குழந்தைகளும் சாப்பிடும் வகையில் எளிமையான முறையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நாட்டுக் கோழிக்கறி - 250 கிராம்
வெங்காயம் : 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகாய் பொடி - 1/2 தே.கரண்டி
தனியாப் பொடி - 1/2 தே.கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தே.கரண்டி
கரம் மசாலா பொடி - 1/2 தே.கரண்டி
தண்ணீர் - 3 கப்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
அரைக்க தேவையானவை
சீரகம் - 1/2 தே.கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
மிளகு - 1/2 தே.கரண்டி
செய்முறை
முதவில் அரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றாக சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஏனைய அனைத்து பொருட்களையும் அரைத்த பேஸ்டையும் ஒரு குக்கரில் போட்டு 4 விசில்கள் வரும் வரையில் நன்றாக வேக வைத்து இறக்கி 10 நிமிடங்கள் விசில் போகும் வரை காத்திந்து,இறுதியாக குக்கரைத் திறந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் அசத்தல் சுவையில் ஆரோக்கியமான நாட்டு கோழி சூப் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |