இந்த விடயங்கள் கணவன் மனைவி பிரிவுக்கு காரணமாகிவிடும்... எச்சரிக்கும் சாணக்கியர்
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.
இவர்களின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் பேர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் குறிப்பிட்ட சில விடயங்கள் திருமண உறவில் பிரிவு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
அப்படி கணவன் மனைவிக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமண உறவை பாதிக்கும் விடயங்கள்
சாணக்கியரின் கருத்துப்படி கோபம் அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு மோசமான குணம் என குறிப்பிடப்படுகின்றது.
திருமண உறவில் எதுவாக இருந்தாலும் கணவன் மனைவி மனம் திறந்து அமைதியான முறையில் பேசுவது மட்டுமே தீர்வு கொடுக்கும் என்கின்றார். மாறாக ஒருவர் மீது ஒருவர் கோபத்துடன் இருப்பது வெகு விரைவில் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.
கணவன் மனைவிக்கு இடையில் அதிக கோபம் இருப்பது மிகவும் ஆபத்தானது. கேபத்துடன் இருக்கும் போது குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து சிந்திக்க முடியாது.மேலும் நல்லது கெட்டதை கோபம் பிரித்தறிய ஒரு போதும் இடமளிக்காது.
சிறிய விடயத்தை கூட கோபமான வார்த்தைகள் பெரிய விடயமாக மாற்றிவிடும் ஆற்றல் கொண்டது என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் எந்த உறவாக இருந்தாலும் பரஸ்பர மரியாதை என்பது இன்றியமையாதது. எனவே கணவன் மனைவிக்கு மத்தியிலும் ஒருவரையொருவர் மதித்து நடக்க வேண்டியது இன்றியமையாதது.
ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்காத கணவன் மனைவி இடையேயான உறவு முழுமையடையாது. இவர்கள் பிரிவதற்காக வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
சாணக்கியர் கருத்துப்படி கணவன் மனைவி இருவரும் தங்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் மனம் விட்டு ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்ள வேண்டும். உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது கணவன் மனைவி உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
எந்த உறவில் ஒளிவு மறைவு இருந்தாலும் நிச்சயம் கணவன் மனைவிக்கு இடையில் மட்டும் இருக்கவே கூடாது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
அப்படி வாழ்க்கை துணையிடம் மறைக்கப்டும் விடயங்கள் இவர்களின் பிரிவுக்கு காரணமாகிடும். குறிப்பாக பொய் சொல்லவே கூடாது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
கணவன் மனைவிக்கு இடையில் வேலைகளை பகிர்ந்துக்கொள்ளும் பழக்கம் இல்லாமல் இருப்பது, அவர்களின் உறவில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
வீட்டு வேலைகளை பெண்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் தொழில் விடயங்களில் ஆண்கள் மட்டும் தான் ஈடுப்பட வேண்டும் என்ற சிந்தனை உறவில் விரிசலை ஏற்படுத்தும்.
இருவரும் தங்களின் உரிமைகளுக்கும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |