இந்த பிரச்சினை இருப்பவர்கள் தவறியும் Perfume போடாதீங்க... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே பெரும்பாலானவர்கள் வெளியில் கிளம்பும் போது, வாசனை திரவியங்ளை (Perfume) பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இன்னும் சிலர் Perfume இன்றி இருக்கவே முடியாது என்கின்ற அளவுக்கு எந்நேரடும் Perfume பிரியர்களாக இருப்பார்கள்.
ஆனால் மருத்துவ ரீதியில் குறிப்பிட்ட சில பிரச்சினை கொண்ட நபர்கள் ஒருபோதும் Perfume பாவிக்கவே கூடாதாம்.
அப்படி யார் யார் Perfume பாவிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், அதனால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
தவிர்க்க வேண்டிய நபர்கள்
மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி ஆஸ்துமா பிரச்சனை அல்லது சுவாசக்கோளாறு சம்பந்தமான பிரச்சினை இருப்பவர்கள் அதிக நறுமணம் கொண்ட Perfume களை பயன்படுத்துவதால், தும்மல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரிக்கும்.
எனவே, இது போன்ற சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் Perfume போடுவதை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது.
குறிப்பாக வாசனை திரவியங்களில் இருக்கும் சில இரசாயனங்கள், கர்ப்பணி பெண்களுக்கு தலைவலி மற்றும் குமட்டல் பிரச்சினையை அதிகரிக்கலாம். எனவே கர்ப்பணிகள் அதிக நறுமணம் கொண்ட Perfume பாவிப்பதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் Perfume பாவிக்க கூடாது காரணம் இவர்களின் சருமம் மற்றும் சுவாச அமைப்பு அதனால் பாதிப்படைய வாய்ப்பு காணப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பெரும்பாலான வாசனை திரவியங்கள், ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்படுவதால், இது சிலருக்கு அரிப்பு, எரிச்சல் உள்ளிட்ட சில சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்பதால், சரும பிரச்சினைகள் இருப்பவர்கள் Perfume பாவிப்பதை தவிர்த்துவிடுவது நல்லது.
தலைவலி பிரச்சனை இருப்பவர்களும் Perfumefளில் இருந்து விலகியிருப்பது நல்லது. அதிக வெப்பத்தில் Perfume களில் இருக்கும் ஒரு சில வேதிப்பொருட்கள் தாக்கமடைந்து சரும பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால், அதிக வெப்பம் நிறைந்த அல்லது வெயிலில் வேலை பார்ப்பவர்கள் Perfume யை தவிர்ப்பது நல்லது.
மருத்துவமனைகளில் வேலை பார்ப்பவர்கள் Perfume பாவிப்பதை தவிர்க்க வேண்டும் என சில கட்டுப்பாடுகள் காணப்படுகின்றது. சுவாச பிரச்சினை காணப்படும் நோயாளிகளுக்கு இதனால், அசௌகரியம் ஏற்பட வாய்பிருக்கின்றது என்பதால் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |