இந்த ராசியினருக்கு பணம் மட்டும் தான் முக்கியமாம்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட குணங்கள்,ஆளுமை ஆகியவற்றுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் மேலாக பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசிகள் எவை என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தைரியசாலிகளாகவும், அதிக மனவுறுதி கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு பிறப்பிலேயே நிதி முகாமைத்துவ அறிவு அதிகமாக இருக்கும். பணம் இன்றி வாழ்க்கையில் எதுவும் செய்ய முடியாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
ஆனால் நேர்மையானவர்களாவதும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.இவர்கள் உறவுகயுளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளை பணம் இருந்தால் தான் உறவுகளையே சரியாக பார்த்துக்கொள்ள முடியும் என்ற யதார்த்தத்தை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.
பணத்தை சேமிப்பதிலும் நிதி முதலீடுகளை சரியாக மேற்கொள்வதிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள், லட்சிய வாதிகளாக இருப்பார்கள்.அவர்கள் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்கான விடாமுயச்சியுடன் செயற்படுவார்கள்.
இவர்கள் இருக்கம் இடத்தில் தலைமை வகிக்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
வாழ்வில் பணம் தான் எல்லாவற்றுக்கும் மேல் என்ற கொள்கைக்கு முன்னுரிமை கொடுக்கும் இவர்கள், நிதி நிலையில் உச்சத்தை அடைய பாடுபடுவார்கள். பணத்தின் மதிப்பை நன்கு உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரகின் ஆதிகம் நிறைந்திருப்பதால், ஆடம்பர வாழ்க்கை மீதும், உலகத்து இன்பங்கள் மீதும் அதிகமான பற்று கொண்டவர்களாக இருப்பார்கள்.
பணம் தொடர்பில் சின்ன சின்ன விடயங்களுக்குக் கூட முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். பணத்தின் மதிப்பை நன்கு உணர்ந்து எதிர்கால வாழ்க்கைக்காக சேமித்து வைக்கும் குணம் இவர்களுக்கு இருக்கும்.
உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் அதைவிட ஒருபடி மேல் பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் இவர்களிடம் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |