காகம் வீட்டிற்குள் வருவது அதிர்ஷ்டமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே காகத்தை அடிப்படையாக வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்றுதொட்டு ஒரு வழக்கமாக இருக்கின்றது.
புரான இதிகாசங்களின் அடிப்படையில் காகம் என்பது சனி பகவானின் வாகமாகும். காகம் சனிபகவாகின் மற்றொரு உருவமாக பார்ப்படுவதும் வழக்கம். அந்த வகையில் காகத்தை பற்றிய அச்சங்கள் இந்துக்களின் மத்தியில் நிலவுகின்றது.
காகமானது ஒருவருடைய வீட்டிற்குள் நுழைந்தால் அது வாழ்க்கையில் பல மாற்றங்களை எற்படுத்தும் என இந்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
காகம் வீட்டுக்குள் துழைந்தால் அதிர்ஷ்டமா? துர்திஷ்டமா? அதனால் என்ன மாதிரியாக பலன்கள் கிடைக்கும் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
காகம் வீட்டின் தெற்கு பக்கத்தில் அமர்ந்திருந்தால் குடும்பத்தின் முன்னோர்கள் கோபமாக இருக்கின்றார்கள் என்பதையே குறிக்கின்து.
வீட்டின் கூரையில் வைத்திருக்கும் தண்ணீரை காகம் குடித்தால் விரைவில் பணக்காரர் ஆவதற்கான யோகம் அமையும்.
சுபக்காரியங்களுக்கு செல்லும் போது வீட்டின் மேற்கு நோக்கி காகங்கள் பறப்பதை கண்டால் உங்களுக்கு வெற்றி கிட்டப் போகின்றது என்பதன் அறிகுறியாகும்.
காலை நேரத்தில் வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி காகம் பறந்தால் விருந்தினர்கள் வரக்கூடும். இவ்வாறு காகம் பறப்பதால் உங்கள் நண்பர்களை சந்திக்கவும் வாய்ப்பு அமையும்.
நிறைய காகங்கள் ஒன்றாக கத்தினால் குடும்பத்திற்கு பெரிய நெருக்கடி அல்லது ஆபத்து ஏற்படப் போவதையே இத உணர்த்துகின்றது.
வீட்டில் காகம் ரொட்டி அல்லது வேறு ஏதேனும் உணவுப் பொருளைப் சாப்பிட்டால் பல நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதையே இது உணர்த்துகின்றது.