நோன்பு திறக்க முதலில் பேரீட்சை பழங்களை சாப்பிடுவதன் ரகசியம் தெரியுமா?
பொதுவாகவே ரமழான் மாதம் முஸ்லிம் மக்களால் மிகவும் புனிதமாக மாதமாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில் செய்யும் நன்மை தீமைகளுக்கு இரட்டிப்பபு பலன் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாதம் முழுவதும் சூரிய உதயத்துக்கு முன்னர் நோன்பை ஆரம்பித்து சூரிய அஸ்தமன நேரத்தில் முடித்துக் கொள்ளும் வழக்கம் பின்பற்றப்படுகின்றது. இந்த புனித மாதத்தில் ஒவ்வொரு நாளும் இறைவனை நினைத்து தினசரி சிறப்புத் தொழுகைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
அந்த வகையில் நோன்பு திறக்கும் போது அனைத்து முஸ்லிம்களுமே பேரீட்சம் பழத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்து நோன்பு திறக்கும் வழக்கம் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
நோன்பை கடைப்பிடிப்பவர்கள் நாள் முழுவதும் எந்தவித உணவும் சாப்பிடாமலும், தண்ணீர் அருந்தாமலும், உமிழ் நீரை கூட விழுங்காமலும் விரதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அப்ப நேன்பு நோற்பவர்கள் மாலையில் பேரீட்சை பழத்தை கொண்டு நோன்பு திறப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வரலாறு மற்றும் ஆன்மீக காரணம்
பேரீட்சையுடன் நோன்பை முடித்துக் கொள்ளும் வழக்கத்தை இறை தூதரான முகமது நபிகள் பின்பற்றினார்.
அராபிய பாரம்பரியத்தின் அடிப்படையில், பேரீட்சை மற்றும் தண்ணீரை எடுத்துக்கொண்டு நபிகள் நாயகம் நோன்பை முடித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தமையால் வரலாற்று ரீதியாக இன்றளவும் இந்த வழக்கம் பின்பற்றப்படுகின்றது.
அறிவியல் காரணம் என்ன?
பேரீட்சை அளப்பரிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருப்பதால் நாள் முழுவதும் விரதம் இருந்து சோர்வாக காணப்படும் உடலுக்கு விரைவில் சக்தியை வழங்கும் ஆற்றல் பேரீட்சம் பழத்திற்கு காணப்படுகின்றது.
பேரீட்சை பழத்தில் குளுகோஸ், ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற இயற்கையான இனிப்புகள் செறிந்து காணப்படுகின்றது. இது ரத்த சர்க்கரையை துரிதமாக அதிகரித்து உடலுக்கு ஆற்றல் வழங்கும் தொழிலை செய்கின்றது.
மேலும் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் விட்டமின் சத்துக்கள் பேரீட்சையில் அதிகமாக இருப்பதால் நீண்ட நேரம் நோன்பு இருந்து சோர்வு அடையும் உடலுக்கு இது உடனடி ஆற்றல் வழங்குகின்றது.
பேரீட்சை பழங்களில் நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது. அது நம் உடல் இயக்கத்திற்கு தேவையான நீர்ச்சத்து தேவையை பூர்த்தி செய்யும்.
பேரீட்சை மிக எளிமையாக ஜீரணம் ஆகக் கூடியது. நோன்பை முடித்துக் கொண்ட பிறகு எளிமையாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற சுழலில், இது சிறந்த தெரிவாக இருப்பதால் பேரீட்சை கொண்டு நோன்பு திறக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகின்றது.