காலை எழுந்ததும் இதில் ஒரு பானத்தை குடித்து பாருங்க... கண்கூடாக தெரியும் உடல் மாற்றம்
காலையில் எழுந்ததும் நாம் அருந்த வேண்டிய நீராகாரத்தைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலை எழுந்ததும் நாம் எடுத்துக்கொள்ளும் முதல் பானம் அன்றைய தினம் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவே வைக்கின்றது. மேலும் சுறுசுறுப்பாகவும் வைக்கின்றது.
அந்த வகையில் நாம் காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய பானங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

காலையில் குடிக்க வேண்டிய பானம்
கிராமபுறங்களில் இன்னும் காலை எழுந்ததும் நீராகாரம் சின்ன வெங்காயத்துடன் சேர்த்து பருகுவதை நாம் அவதானித்து வருகின்றோம். இவை உடம்பிற்கு தேவையான குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் ரத்தம் ஓட்டம் சீராக்கி தேவையான சத்தையும் கொடுக்கின்றது.
வழக்கமாக குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு தண்ணீரை காலை வெறும் வயிற்றில் அரை மணி நேரத்திற்குள் குடிக்கவும். சுடுதண்ணீர் எடுத்துக் கொள்ளாமல், வெறும் தண்ணீரை பருகவும். இவை அசிடிட்டியைக் குறைக்கின்றது.

வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லதாகும். முதல் நாள் இரவு குளிர்ந்த நீரில் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் காலையில் வெந்தயத்தை தயிருடன் சேர்த்து அருந்தவும். தண்ணீருடன் சேர்த்து வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவது, மோருடன் குடிப்பதும் கூடாது.
தினமும் காலையில் தண்ணீரில் எலுமிச்சை நீரை கலந்து குடித்தால் உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்க செய்வதுடன், குடல் இயக்கத்திற்கு ஊக்கமளிக்கின்றது.

பூண்டை இடித்து அதனை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ரத்த ஓட்டம் சீராவதுடன், கல்லீரல் செயல்பாட்டையும் மேம்படுத்துகின்றது.
அருகம்புல் பானம் அல்சர் நோயாளிகளுக்கு சிறந்த பானமாகும். ஆதலால் அருகம்புல்லை அரைத்து சாறு எடுத்து வெந்நீரில் வெறும்வயிற்றில் குடிக்கவும்.

இஞ்சியையும் தோல் நீக்கி சாறு எடுத்து, தென் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன், நுரையீரல் தொடர்பான நோயும் சரியாகும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் சாறு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |