நீரிழிவு நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நுங்கு
நார்ச்சத்து அதிகம் கொண்ட நுங்கில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றது.
மேலும் இவை ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை மெதுவாக கலக்க உதவுகின்றது. மிகவும் குளிர்ச்சியினை அளிக்கும் நுங்கு நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவில் நுங்கு சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நீர்ச்சத்து அதிகம் கொண்டதுடன், கலோரி குறைவாகவும் இதில் உள்ளது.
மேலும் குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால் ரத்தத்தில் திடீர் சர்க்கரை அளவினை உயர்த்துவதில்லை. நீரிழிவு நோயாளிகளின் சோர்வினை உடனடியாக நீக்கி ஆற்றலை அளிக்கின்றது.

கோடையில் நீர்ச்சத்து குறையாமல் நம்மை பாதுகாப்பதுடன், இதனை அளவாக எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். நாள் ஒன்றின்று இரண்டு அல்லது மூன்று என சாப்பிடுவது சிறந்தது.
நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதுடன், கல்லீரல் ஆரோக்கியத்தினையும் இவை மேம்படுத்துகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |