வீடே மணக்கும் சிக்கன் வறுவல்... வெறும் 10 நிமிடத்தில் எப்படி செய்யனும் தெரியுமா?
வீடே மணக்கும் சுவையான சிக்கன் வறுவல் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிக்கன் வறுவல்
இன்று சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர். அசைவ பிரியர்களின் பிடித்த உணவாக சிக்கன் இருக்கின்றது.
வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் அசைவ விருந்தை தான் பெரும்பாலான நபர்கள் வழங்குகின்றனர். அந்த வகையில் சிக்கனில் குழம்பு, சிக்கன் 65, சிக்கன் சுக்கா போன்றவற்றை சாப்பிட்டிருப்பீர்கள்.
ஆனால் இதைவிட சிறந்த முறையில் சிக்கன் வறுவல் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் - 1 கிலோ
பூண்டு - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் - 20
கடலை எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
தேங்காய் பால் - 1 கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை
கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் தட்டி வைத்த பூண்டு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
அதே வாணலியில் சிக்கன், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சிக்கனுடன் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சிக்கன் வறுவல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |