சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை இந்த பதிவில் காணலாம்.
நாவல் பழம்
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் B, பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
நாவல் மரத்திலுள்ள இலை, மரப்பட்டை, விதை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.
ஹீமோகுளோபின் அளவினை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் செய்கின்றது. அதுமட்டுமின்றி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த நண்பனாக இருப்பதுடன், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
நாவல் பழ சீசன் ஆரம்பித்துவிட்டால் இதனை வாங்கி சாப்பிடுவதற்கு மறந்துவிட வேண்டாம்.

சில பயன்கள்
நாவல் பழத்திலுள்ள கிளைசெமிக் ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகின்றது. மேலும் இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தினை மேம்படுத்த உதவுகின்றது.
பாரம்பரிய மருத்துவமான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் இதன் விதையினை பொடியாக தயாரித்து, நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு நாவல் பழத்தினை அப்படியே சாப்பிடலாம். அவ்வாறு இல்லையெனில் பொடியாகவும் சாப்பிட்டால் நல்ல பலனை காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |