இந்த பொருட்களுடன் தவறியும் தேனை சேர்த்து சாப்பிடாதீங்க... உயிருக்கே ஆபத்தாம்!
பொதுவாக எந்த உணவுப்பொளாக இருந்தாலும் அது ஒருசில தினங்களில் பழுதடைந்துவிடும் உலகில் பழுதடையாத ஒரே உணவுப்பொருள் தேன் தான்.
இதனாலேயே ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் தேன் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. பல்வேறு நோய்களுக்கு அரும் மருந்தாக காணப்படும் தேன் உடலுக்கு மிகவும் நல்லது.
பொதுவாக நன்மை பயக்கும் சில உணவு பொருட்களை, வேறு சில உணவு பொருட்களுடன் சேர்த்து உண்ணும் போது, அவை உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
அவை இரண்டும் தனித்தனியே நல்ல உணவுகள் என்றாலும், அவற்றை சேர்த்து சாப்பிடும் போது, அது ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடும் அந்த வகையில் தேனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத பொருட்கள் குறித்து தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
தேனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாதவை
தேனை ஒருபோதும் சூடாக்கி சாப்பிடுவதையும் அல்லது சூடான பொருட்களுடன் கலந்து சாப்பிடுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்க கூடும்.
நெய் மற்றும் தேன் தனித்தனியே சாப்பிடும் போது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது. ஆனால் நெய் மற்றும் தேன் ஒரு அபாயகரமான கலவையாக ஆகும். தேனுடன் கலக்கக் கூடாத உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. இது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது.
முள்ளங்கி மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உடலில் நச்சுக்கலை உருவாக்க கூடும். எனவே சாலட் போன்றவற்றில் தேனைச் சேர்க்கும்போது, முள்ளங்கியைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
தேன் மற்றும் இறைச்சி பொருட்கள் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே இதை இரண்டையும் ஒன்றாக ஒருபோதும் சாப்பிடவே கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |