காஷ்மீரி பாணியில் சிக்கன் மசாலா... அசத்தல் சுவையில் எப்படி செய்வது?
பொதுவாகவே சிக்கனை எப்படி வைத்தாலும் கறியின் சுவையால் அந்த குழம்புக்குத் தேவையான சுவை கிடைத்துவிடும். இப்படி சுவையே இல்லாமல் செய்தாலே சுவை கிடைக்குமெனில் முறையாக, பக்குவமாக செய்தால் எப்படி இருக்கும்.
அட்டகாசமான சுவையில் காஷ்மீரி பாணியில் சிக்கன் மசாலாவை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 கப்
பட்டை - 2
மிளகு - 25
கருப்பு ஏலக்காய் - 3
அன்னாசிப்பூ - 2
பச்சை ஏலக்காய் - 4
பிரியாணி இலை - 2
பெரிய வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
தக்காளி - 4-5 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி
சீரகத் தூள் - 1 மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - 1/2 மேசைக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
பிரியாணி மசாலா - 1/2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 10
சிக்கன் - 1 1/2 கிலோ
தயிர் - 250 கிராம்
எலுமிச்சை சாறு - 1மேசைக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 1 கப் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, மிளகு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்நிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகம் வரையில் நன்றாக வதக்கி, அதில் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மஞ்சள் தூள் தூவி நன்றாக மென்மையாகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக 3 தொடக்கம் 4 நிமிடம் வரையில் கிளறி விட வேண்டும்.
பின்பு அதனுடன் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு, பிரியாணி மசாலா மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக கிளறி விட வேண்டும்.
பின்னர் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வரையில் நன்றாக கிளறி வேகவிட வேண்டும். பின்ர் அதனுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து 1 நிமிடம் நன்றாக கலந்துவிட வேண்டும்.
மசாலா சிக்கனுடன் நன்றாக கலந்ததும் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, முடி வைத்து 10-15 நிமிடம் சிக்கனை மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவிட்டு ,கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான காஷ்மீரி சிக்கன் மசாலா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |