சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்டவர்கள் வறுமையில் இருந்து வெளிவரவே முடியாது... உங்களிடம் இருக்கா?
சாணக்கிய நீதி உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக திகழ்கின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
இவரின் கருத்துக்களையும் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம். இந்த நவீன யுகத்திலும் சாணக்கியரின் கருத்துக்களுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் குறையவே இல்லை.
சாணக்கிய நீதியில் வாழ்ககைக்கு தேவையான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் தெளிவான விளக்கம் கொடுக்கப்படுட்டுள்ளது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில பழக்கங்கள் கொண்டவர்களால் வாழ்வில் வறுமையில் இருந்து விடுபடவே முடியாது என சாணக்கியர் எச்சரித்துள்ளார் அத்தகைய குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வறுமையை ஏற்படுத்தும் குணங்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம் சிந்திக்காமல் செலவு செய்யும் குணம் கொண்டவர்கள் வாழ்வில் பணத்தை சேமிக்கவே அல்லது வறுமையில் இருந்து விடுபடவோ வாய்ப்பில்லை என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
ஆனால் வேடிக்கையான விடயம் என்னவென்றால் செல்வத்தை வீணாக விரயம் செய்வர்கள் தான் அதிகம் பணத்தின் மீது ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் சிந்தனையற்ற செலவுகள் ஒருபோதும் இவர்களை பணக்காரர் ஆகவே விடாது.
பணத்தை முதலீடு செய்யும் போது தீர விசாரிக்காமல் முதலீடு செய்யும் குணம் கொண்டவர்கள் பாரியளவில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். இவர்கள் வாழ்வில் வறுமையில் விழுவதற்கு இந்த குணம் மிகப்பெரும் காரணமாக அமைந்துவிடும் என்கின்றார் சாணக்கியர்.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் குணம் கொண்டவர்கள் எவ்வளவு விரைவில் பணத்தை சம்பாதிக்கின்றார்களே அவ்வளவு சீக்கிரம் பணத்தை இழப்பார்கள்.
இந்த குணம் கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் வறுமையில் இருந்து வெளிவரவே முடியாது என சாணக்கியர் எச்சரித்துள்ளார். தவறாக வழியில் சம்பாதித்த பணத்தை தைரியமாகவும் சுதந்திரமாகவும் செலவு செய்யவும் முடியாது. வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
சாணக்கியர் கூற்றுப்படி தவறான நண்பர்களுடன் பழக்கம் வைத்திருப்பவர்கள் வாழ்வில் நிதி ரீதியில் ஒருபோதும் முன்னேற்றம் அடையவே முடியாது இவர்கள் வாழ்க்கை வறுமையில் தான் இருக்கும் என்கின்றார் சாணக்கியர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |