நாக்கில் அடிக்கடி புண் வருகிறதா? அப்போ இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க- பலன் நிச்சயம்
பொதுவாக நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அவசியம் தேவை.
அதில் முக்கியமானவை தான் வைட்டமின் பி.
இந்த வைட்டமின் பி உடலில் குறைந்தால் ஏகப்பட்ட பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்த வகையில் வைட்டமின் பி குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வைட்டமின் பி குறைபாட்டின் அறிகுறிகள்
- உடலுக்கு தேவையான ஆற்றலை உற்பத்தி குறையும்.
- ரத்தசோகை
- தோல்வெடிப்பு
- பெரிபெரி போன்ற நோய்கள் வரக்கூடும்.
- வாயில் புண்கள் ஏற்படல்.
1. உடலில் வைட்டமின் பி குறைபாடு ஏற்பட்டால் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்வீர்கள். இது அதிகரிக்கும் பட்சத்தில் ரத்தசோகை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தொடர்ந்து உங்களுக்கு களைப்பு, சோர்வு ஏற்படலாம்.
2. வைட்டமின் பி குறைபாடு ஏற்பட்டால் சருமப் பிரச்சனை ஏற்படலாம். அதாவது தோல்களில் வெடிப்பு, சிராய்ப்பு, அரிப்பு, வீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
3. நரம்பியல் மண்டலம் ஒழுங்காக இயங்குவதற்கு வைட்டமின் பி அவசியம். இதில் குறைபாடு ஏற்படும் போது உணர்வின்மை கை, கால் மற்றும் உடலின் பல பகுதிகளில் வலிகள் ஏற்படும்.
4. நரம்பியல் கடத்திகள் மற்றும் மூளை செயல்பாட்டில் முக்கிய பங்காற்றும் வைட்டமின் பி குறைபாடு ஏற்படும் போது மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனால் மன அழுத்தம், எரிச்சல், குழப்பம் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவார்கள்.
5. வைட்டமின் பி குறைபாடு ஏற்படும் போது வாய் அல்சர் மற்றும் நாக்கில் புண்களை ஏற்படுத்தும். ஏனெனின் நாக்கில் சுவை அரும்புகள் முறையாக செயல்படுவதற்கும் வைட்டமின் பி அவசியம்.
6. சிலருக்கு அடிக்கடி ஞாபக மறதி மற்றும் அறிவாற்றல் குறைபாடு பிரச்சினை வரும். இதற்கு வைட்டமின் பி, பி6, பி9 மற்றும் பி12 குறைபாடு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. இதனால் உங்களுக்கு டிமென்ஷியா, நியாபக மறதி, அறிவாற்றல் குறைபாடு போன்றவை ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |