கேஸ் சிலிண்டர் நீண்ட நாட்களுக்கு இருக்கணுமா? அப்போ இப்படி செஞ்சி பாருங்க
பொதுவாக பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் தான் இந்த உலகில் அதிகமாக இருக்கிறார்கள்.
அப்படி பட்ஜெட் போடும் போது மின்சாரம், தண்ணீர், சிலிண்டர், டெலிபோன் பில் போன்ற குறிப்பிட்ட சிலவற்றை முடிந்தவரை குறைவாக பயன்படுத்த முயற்சிப்போம்.
அந்த வகையில், மேற்குறிப்பிட்டவற்றில் எல்பிஜி சிலிண்டர் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த என்ன செய்வது என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பாவனையை குறைக்க டிப்ஸ்
1. வெப்பத்தை சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அத்துடன் சமையலுக்கு மூடி உள்ள பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். இது சமையல் செய்யும் நேரத்தைக் குறைத்து சிலிண்டர் பாவனை கட்டுபடுத்துகின்றது.
2. அடுப்பை பயன்படுத்தப்படும் பாத்திரத்தின் அளவிற்கு ஏற்ப சுடரை எறிய வைக்க வேண்டும். அளவிற்கு அதிகமாக சுடரை எறிய வைப்பதால் எரிவாயுவை வீணாக்குகிறது.
3. அவசரம் இல்லாமல் குறைந்த வெப்பத்தில் உணவை வேக வைக்கவும். இப்படி செய்தால் குறைந்த அளவு வாயுவை செலவழிக்கலாம்.
4. வீடுகளில் அடிக்கடி குழாய் மற்றும் அடுப்பு இணைப்புகளில் சரிப்பார்க்க வேண்டும். கசிவுகள் இருந்தால் கேஸ் அதிகமாக போகும்.
5. சமையல் செய்யும் போது கேஸை மட்டும் பயன்படுத்தாமல் சில மின்சார உபகரணங்களையும் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக வெந்நீர் வைக்க, முட்டை வேக வைக்க, நூடுல்ஸ் செய்ய மின்சர அடுப்பை பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |