FASTag : ஆகஸ்ட் 1 முதல் பாஸ்டேக்-கில் அறிமுகமாகும் புதிய விதிகள் என்னென்ன தெரியுமா?
டோல் கட்டணம் செலுத்த மற்றும் டோல் கேட்டுகளில் நெரிசலைக் குறைக்கும் விதமாக கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்த மின்னணு கட்டண வசூல் முறையை (FASTag) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் பாஸ்டேக்கின் புதிய விதிகள் ஆகஸ்ட் 1 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருகின்றது. இது குறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
புதிய விதிகள்
பாஸ்டேக்கிற்கான KYC -ஐ புதுப்பிக்க வேண்டியது கட்டாயம். இந்த செயல்முறை ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
அதனடிப்படையில் சகல வாகன ஓட்டிகளும் FASTag வழங்குநர்களும் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகின்றது.
NPCI வழிகாட்டுதல்களின் பிரகாரம், FASTag வழங்கும் நிறுவனங்கள், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட அனைத்து FASTagகளுக்கும் அக்டோபர் 31ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் KYC-ஐ புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31 வரை, FASTag சேவை வழங்குநர்கள் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டள்ளது.
அத்துடன் வாகனம் வாங்கிய 90 நாட்களுக்குள் பதிவு எண் புதுப்பிக்கப்பட்டிக்க வேண்டியதும் முக்கியமாகும்.
மேலும் வாகன பதிவு எண் மற்றும் சேஸ் எண் என்பவற்றை Fastag உடன் இணைப்பதும் அவசியம்.
KYC புதுப்பிப்புக்கான கடைசி நாள் அக்டோபர் 31 ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் KYC அப்டேட் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுளது. குறித்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என குறிப்பிடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |