Dating apps மூலம் துணையை தேடுபவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி
பொதுவாக தற்காலத்தில் அனைத்துமே தொழில்நுட்ப மயமாகிவிட்டது. கணணி மற்றும் இணையத்தை தவிர்த்து வாழ்க்கை நடத்த முடியாத சூழல் தற்போது உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது.
தற்காலத்தில் காதலியை கூட இணையத்தில் தேடிக்கொள்ளும் வசதியை டேட்டிங் செயலி ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது. இளைஞர்களை பொருத்தவரையில் இதைவிடவும் மகிழ்ச்சியான விடயம் இருக்க முடியாது.
எந்தளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கின்றதோ, அதே அளவுக்கு இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களும் அதிகரிக்கின்றது என்பதை நாம் அனைவருமே உணர்ந்து செயற்பட வேண்டும்.
டேட்டிங் செயலிகளின் மூலம் காதலி மற்றும் காதலனை தேடுபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்துக்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
டேட்டிங் செயலிகள் ஏற்படுத்தும் ஆபத்துக்கள்
டேட்டிங் செயலிகளில் மூலம் போலியான முறையில் யார் வேண்டுமானாலும் எளிதாக புரொபைல் உருவாக்கிக் கொள்ளக்கூடிய வசதி காணப்படுகின்றது.
டேட்டிங் செயலியை பலரும் தங்கள் அடையாளத்தை மறைக்க அல்லது மற்றவர்களை ஏமாற்ற மற்றும் பணமோசடி செய்வதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தக்கூடிய அபாயம் அதிகமாகவே காணப்படுகின்றது.
டேட்டிங் ஆப்ஸைப் பயன்படுத்தும் போது, பெயர், புகைப்படம், இருப்பிடம் மற்றும் பிற விஷயங்கள் அதாவது தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்த தகவல்களை தவறான முறையில் பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்கும் வேலைகளும் இந்த செயலிகள் மூலம் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.
ஹேக்கர்கள் அல்லது டேட்டிங் ஆப்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் நமது தகவல்களை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.
டேட்டிங் செயலிகளில் வழியாக இணைய மிரட்டல் மற்றும் துன்புறுத்தல்கள் போன்றனவும் பலிவாங்கும் செயல்களும் இடம்பெற அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
டேட்டிங் செயலிகளின் பாவனையானது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றது. இதனால் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் அதிகரித்து இளைஞர்களின் தற்கொலைகள் அதிகரிப்பதிலும் இது பெரும் பங்கு வகிக்கின்றது.
ஒரு நபர் மற்றொரு நபரை ஏமாற்ற இது சிறந்த களமாக காணப்படுகின்றது. அதனால் அதிகமாக மனரீதியான பாதிப்புகளும் சில சமயங்களில் உடல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. மேலும் அந்த டேட்டிங் செயலிகளின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி பலபேரின் நிஜவாழ்க்கையில் இருக்கும் உறவுகளை வலுவாக பாதிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |