உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம்? பலரும் அறியாத உண்மை
பொதுவாக இன்றைய காலத்தில் உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.
அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் ஃபாஸ்டிங் செய்வது, மிக குறைவாக சாப்பிடுவது, தினசரி முன்று வேளைக்கு பதிலாக 2 அல்லது ஒரு வேளை உணவு சாப்பிடுவது, டயட் உணவு முறையை பின்பற்றுவது என பல்வேறு எடைஇழப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மையில் உடற்பயிற்சிகள் எதுவும் இன்றி கூட உடல் எடையை எளியமுறையில் குறைக்கலாம். அந்தவகையில் உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி என்ற வழிமுறையை காணலாம்.
இன்றைய ராசிபலன்: குபேர அருளால் தேடி வரும் பணம் மழை! எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?
நார்சத்து உணவகள்
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். குறிப்பிட்ட இடைவெளியில் சீராக தண்ணீர் பருகுதல், உலர் பழங்களை சாப்பிடுதல் பசியை அதிகம் கட்டுப்படுத்திவிடும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அந்தவகை உணவுகள் செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு நீண்ட நேரம் உற்சாகமாக செயல்படவும் வழிவகுத்து உடல் எடையை கட்டுப்படுத்தும்.
சீக்கிரமாக கர்ப்பமாக நினைக்கும் பெண்களுக்கு! கருமுட்டை வெளிப்படுவதற்கான முக்கிய அறிகுறிகள்
தண்ணீர் பருகுதல்
தண்ணீரை பருகுதல், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுதல் போன்ற செயல்முறைகள் உடல் எடையை கட்டுப்படுத்த சிறந்த வழியாகும். ஏனெனில் இது நமது உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பதும் உடல் எடையை குறைக்க உறுதுணையாக இருக்கும்.
தூக்கமின்மையால் அவதிப்பட்டால் உடல் பருமன் அதிகரித்துவிடும். ஆகவே தேவையான நேரம் தூங்குவது நல்லது. ஏனெனில் தேவையான நேரம் தூங்குவது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோனை கட்டுப்படுத்தி பசியையும் குறைக்கும்.