மின்னல் வேகத்தில் எடை குறைக்கும் சோம்பு டீ! எத்தனை கிளாஸ் குடிக்கணும் தெரியுமா?
பொதுவாக நம்மில் பலர் தங்களின் உடல் எடையை குறைக்க வேண்டும் என நிறைய முயற்சிகள் செய்து கொண்டிருப்போம்.
ஆனால் சிலருக்கு எந்த முயற்சிகள் செய்தாலும் உடலிலிருந்து ஒரு கிலோ கூட குறைவு ஏற்பட்டிருக்காது.
மேலும் இவ்வாறு குறையாமல் இருக்கும் போது சிலருக்கு காலப்போக்கில் இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மாறாக உடல் எடையை நாம் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு குறைக்கலாம்.
அந்த வகையில் உடல் எடையை குறைக்கும் மூலிகை பொருட்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. சோம்பு
அதிக எடை பிரச்சினை இருப்பவர்கள் காலையில் தினமும் இரண்டு சோம்பு சாப்பிட வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் நிச்சயமாக எடை இழப்பு ஏற்படும்.
மேலும் தனியாக சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீரிலில் ஊற வைத்து சாப்பிடலாம்.
இது ஆரோக்கியமான முறை என்பதால் இதனை ஆண், பெண்கள் என வேறுபாடு இன்றி தாராளமாக பயன்படுத்தலாம்.
சோம்பை எப்படி சாப்பிடுவது?
ஒரு கைப்பிடி அளவு சோம்பை எடுத்து பொடியாக அரைத்து அல்லது இடித்து தயிர், சர்க்கரை பாகு, டீ அல்லது காபி இப்படி ஏதாவது ஒன்றில் கலந்து குடிக்கலாம்.
சுவைக்கேற்ப அதனுடன் வெந்தயம், கருப்பு உப்பு, பெருங்காயம் மற்றும் சர்க்கரை போன்றவற்றில் ஏதாவது சேர்த்தும் கொள்ளலாம்.
இவ்வாறு சோம்பு எடுத்து கொள்வதால் செரிமானம் முறையாக நடந்து வேகமாக எடை இழப்பு ஏற்படும்.