உடல் எடையைக் குறைக்க கஷ்டமா? இந்த 5 உணகளில் ஒன்றை எடுத்துக்கோங்க
பொதுவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைபவர்கள் கட்டாயம் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் எடுப்பது அவசியமானது ஆகும்.
குறிப்பாக அதில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது. மேலும் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வர்கள் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.
அந்தவகையில் உடல் எடையை குறைக்க என்ன மாதிரியான பொட்டாசியம் உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்கு
பசி கட்டுக்குள் இருக்கும் என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதில் பொட்டாசியம் சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.
இனிப்பு உருளைக்கிழங்கில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது, எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த சிற்றுண்டிகளில் ஒன்றாக இனிப்பு உருளைக்கிழங்கு உள்ளது.
சித்திரை மாதத்தில் அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 5 ராசிகள்! எந்தெந்த ராசினு தெரியுமா?
பீன்ஸ், கீரை மற்றும் தேங்காய் நீர்
உடல் எடையை குறைக்க தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் பீன்ஸ்சில் உள்ளது. இதிலுள்ள புரோட்டீன் மற்றும் ஃபைபர் நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்க உதவுகிறது, இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்க உதவுகிறது.
பொதுவாக உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது நீரேற்றத்துடன் இருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் நீரேற்றமாக இருக்க தேங்காய் நீரை குடிப்பது ஒரு சிறந்த வழியாகும்.
கீரையில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஏதேனும் ஒரு வகையான கீரைகளை அன்றாடம் சேர்த்து கொள்ளலாம்.