எடையை குறைக்க நடைபயிற்சி வேண்டாம்... இதை செய்தால் போதும்
பொதுவாக காலையில் எழுந்து தினமும் நடைபயிற்சி மேற்கொண்டால் உடல் எடை குறைவது மட்டுமின்றி, மனதிற்கும் நன்மையே கிடைக்கும்.
ஆனால் தற்போதைய இயந்திர உலகில் மக்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்களே தவிர தனது உடல் நலனில் அக்கறை கொள்வதில்லை. குடும்பத்தினருடன் கூட நேரத்தினை செலவிட முடிவதில்லை.
சிலருக்கு காலையில் உடற்பயிற்சி செய்வதற்கே நேரம் இருப்பதில்லை... அவ்வாறு இருப்பவர்கள் நடைபயிற்சி செல்லாமல் வீட்டில் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினாலே பல ஆரோக்கிய நன்மையை பெற முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜிம் செல்ல தேவையில்லையா?
உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஜிம் செல்லாமல் இனி படிகட்டு ஏறினால் போதும். உடல் உழைப்புகள் அதிகம் இல்லாத நபர்கள் படி ஏறுவது நல்ல பலனை கொடுக்கும்.
இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை எரிக்குமாம். 10 நிமிடம் நடைபயிற்சி செல்லும் போது கரையக்கூடிய கலோரி வெறும் 5 நிமிடத்தில் படி ஏறுவதால் கரைந்துவிடுமாம் அதுமட்டுமில்லாமல் அதிக சக்தியையும் கொடுக்கின்றது.
ஆதலால் உடற்பயிற்சி செய்வதை விட படிஏறுவதை வழக்கமாக வைத்துக்கொண்டால் ஆயுட்நாட்கள் அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றது.
மேலும் உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், வெறும் 10 நிமிடங்கள் ஏறி இறங்கினால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்ற வியாதிகள் நெருங்காதாம்.
படிக்கட்டில் எவ்வாறு ஏற வேண்டும்?
முதலில் கீழ் படிக்கட்டில் நின்றுகொண்டு கால்களை இடுப்பு அகலம் விரித்து நின்றுகொண்டு, பின்பு கால்களை சற்று மடக்கி உடலை ஸ்வாட் வைத்து குதித்து முதல் படிக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு உடலை சமநிலையில் வைத்துக்கொண்டு படிக்கட்டுகளில் ஏறவும், இதே போன்று இறங்கவும் செய்ய வேண்டும்.
தொடர்ந்து 20 முறை அல்லது அரை மணி நேரம் செய்து முடித்தால், இதுவே நல்ல உடற்பயிற்சியாக இருக்கின்றது.
உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று கார்டியோ வகை உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஈடாக இந்த படிஏறுதல் நன்மைகளை கொடுக்குமாம்.
முடிந்தவரை படிகட்டில் ஏறி செல்லும் இடங்களுக்கு லிப்ட் வழியாக செல்லாமல் இந்த பயிற்சியினை மேற்கொண்டால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |