Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த தினங்களில் பிரஜனின் நடவடிக்கை குறித்து பேசிய விஜய் சேதுபதி சேரை தூக்கிப் போட்டு அரங்கத்தையே விட்டு கிளம்பியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வார தலைவராக எப்ஃஜே இருந்து வரும் நிலையில், கடந்த நாட்களில் நடைபெற்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் மோசமாக நடந்து கொண்டனர்.

இதில் பிரஜன் தனது மனைவி சாண்ட்ராவிற்கு ஆதரவாகவும், சாண்ட்ரா கணவர் பிரஜனுக்கு ஆதரவாகவும் இந்து விக்ரமை மோசமாக நடத்தினர்.
இதனை இன்றைய நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியுள்ளார். இதில் பிரஜன் விஜய்சேதுபதியையே எதிர்த்து பேசிய நிலையில், தான் அமர்ந்த இருக்கையை எடுத்தெறிந்து, அரங்கத்தை விட்டே வெளியேறியுள்ளார்.
விஜய் சேதுபதியின் இந்த நடவடிக்கையினை அவதானித்த பார்வையாளர்கள் இன்றைய நிகழ்ச்சியினை அவதானிக்க எதிர்பார்த்து உள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |