நடைபயிற்சி மேற்கொள்ள நேரம் இல்லையா? நோயிலிருந்து தப்பிக்க இதோ வழி
இன்று நடைபயிற்சி என்பது ஒவ்வொரு நபர்களின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது.
ஏனெனில் இன்றைய காலங்களில் நபர்களின் உடல் உழைப்பு என்பது மிகவும் குறைவாக காணப்படுகின்றது. பெரும்பாலும் அமர்ந்த இடத்திலிருந்து தான் வேலைகளை செய்து வருகின்றனர்.
இதனால் பல வியாதிகள் நமது உடம்பிற்குள் புகுந்துள்ள நிலையில், அதனை சரி செய்வதற்கு பணத்தை தண்ணீராக செலவழித்து வருகின்றோம். அவ்வாறு உடல் உழைப்பு இல்லாதவர்கள், உடற்பயிற்சியினை மேற்கொள்ளலாம்.
சிலருக்கு உடற்பயிற்சி மேற்கொள்வதற்கும், நடைபயிற்சி மேற்கொள்வதற்கு நேரம் இல்லை என்று கூறுவார்கள். அவ்வாறு நடைபயிற்சிக்கு நேரமில்லை என்பவர்களுக்கு சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நடைபயிற்சி செல்ல நேரமில்லையா?
அலுவலகத்தில் ஒருவரிடம் பேச வேண்டியிருக்கும் போது மெயில், மெசேஜ் அனுப்புவதைத் தவிர்த்துவிட்டு எழுந்து சென்று நேரில் பேசிவிட்டு வரலாம்.
செல்போனில் பேசும் போது நடந்துகொண்டே பேசலாம்.
டிவி ரிமோட்டை வேறு அறையில் வைக்கலாம். ஒவ்வொரு முறை சேனலை மாற்றும் போதும் எழுந்து சென்று ரிமோட்டை எடுத்து வரலாம்.
டிவியில் ஒவ்வொரு முறை இடைவேளை வரும்போதும் எழுந்து அறைக்குள்ளேயே நடக்கலாம்.
30 நிமிடங்களுக்கு ஒருமுறை அலாரம் வைத்து எழுந்து சில அடிகள் நடக்கலாம்.
லிஃப்ட், எஸ்கலேட்டர்களை தவிர்த்துவிட்டு முடிந்தவரை படிகளைப் பயன்படுத்தவும்.
அருகிலிருக்கும் கடைகளுக்கு நடந்து செல்வதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.