உடல் எடையைக் குறைக்கும் வெஜிடபள் சாலட்: வாரத்தில் 4 முறை சாப்பிட்டால் போதும்
உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.
அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும். உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடல் எடையை குறைப்பதற்கு மிக முக்கியம் உணவு கட்டுப்பாடு தான். அப்படி உணவைகட்டுக்குள் வைக்க இந்த உணவு சிறந்ததாக இருக்கும்.
எடையை குறைக்க வெஜிடபள் சாலட் செய்முறை
முதலில் ஒரு வெள்ளரிக் காயை எடுத்து தோலினை சீவிவிட்டு, அதை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின் வெங்காயம், தங்காளி இரண்டையும் நன்கு நறுக்கி, அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சிறிதளவு மிளகுத்தூள், தேவைக்கு சிறிதளவு உப்பு ஆகியவற்றை அதன்மீது தூவிக்கொள்ளவேண்டும். பின் ஒரு கைப்பிடி வேர்க்கடலையை வறுத்த சேர்த்து சிறிதளவு கொத்தமல்லித்தழையை தூவி எடுத்தால் வெஜிடபிள் சாலட் தயார்.
இந்த வெஜிடபிள் சாலட்டை தொடர்ந்து வாரத்தில் 4 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |