10 நாளில் 10 கிலோ எடையைக் குறைக்கலாம்: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சூப்பர் டிப்ஸ்!
பொதுவாக எமக்கு இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று தான் உடல் எடை அதிகரிப்பு.
ஒவ்வொருநாளும் தினமும் கண்ணாடியைப் பார்க்கும் போது ஏன் இப்படி உடல் எடை ஏறிக்கொண்டே போய்கொண்டிருக்கிறது என்று அதிக கவலை வந்துக்கொண்டுதான் இருக்கும்.
இந்த உடல் எடையால் பலரின் கேலிக்கிண்டல்களுக்கும் ஆளாகியிருப்போம். சிலர் இந்த உடல் எடையைக் குறைப்பதற்கு பல பல வழிகளில் முயற்சித்து சோர்வடைந்திருப்பார்கள்.
அதற்காக கவலைப்படவேண்டியது இல்லை. 10 நாளில் 10 வகையான டிப்ஸ்களுடன் உங்கள் உடல் எடையைக் குறைக்கலாம்.
10 நாளுக்கான டிப்ஸ்
முதலாம் நாள்
நம்முடைய உடலுக்கு மிக முக்கியமான ஒன்று நீர் சத்து தான். நாம் தினமும் நீர் சத்துள்ள பொருட்களை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய தொடங்கும். முதல் நாள் தண்ணீர் மட்டும் தான் குடிக்கவேண்டும். முடிந்தளவுக்கு தண்ணீர் மட்டும் குடியுங்கள். அதிகபட்சமாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை உங்களால் முடிந்த அளவிற்கு தண்ணீர் குடியுங்கள்.
இரண்டாம் நாள்
முதல் நாள் இரவே தண்ணீரில் புதினா அல்லது துளசி சேர்த்து ஊறவைக்கவும். அந்த தண்ணீரை மறுநாள் காலையில் அதாவது 2 ஆம் நாள் தண்ணீர் தாகம் எடுக்கும் போது குடிக்கவும். இரண்டாவது நாளே உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற ஆரம்பம் ஆகும். அப்போது நீங்கள் சத்துக்கள் இல்லாமல் இருப்பீர்கள்.
மூன்றாம் நாள்
தண்ணீர் தான் குடிக்கவேண்டும். ஆனால் அதில் வெள்ளம் அல்லது கருப்பட்டி தண்ணீரை தான் குடிக்கவேண்டும். அந்த நாள் முழுவதும் தண்ணீருக்கு பதிலாக இதை மட்டும் குடிக்கவேண்டும். ரொம்ப பசியாக இருந்தால் க்ரீன் டீ, சுக்கு டீ, மிளகு டீ, பால், சர்க்கரை, சேர்க்காமல் குடிக்கலாம்.
நான்காம் நாள்
உடலுக்கு புரத சத்துக்கள் தேவைபடும். அதனால் நாம் அன்று சூப் குடிக்கவேண்டும். அது அசைவம் மற்றும் சைவமும் சாப்பிடலாம். இருந்தாலும் தண்ணீரும் குடித்து கொள்வது நல்லது.
ஐந்தாம் நாள்
ஐந்தாம் நாள் குடிக்கின்ற தண்ணீரில் 1 பிஞ் அளவு உப்பு, சர்க்கரை அல்லது பண வெல்லம் கலந்து குடிக்கவேண்டும். கண்டிப்பாக 2 லிட்டருக்கு மேல் இந்த தண்ணீரை குடித்து கொள்ளவேண்டும். அதனையும் மீறி பசித்தால் பழங்கள் சாப்பிடலாம்.
ஆறாம் நாள்
ஆறாவது நாள் முடிந்த Fresh Juice குடிக்கவேண்டும். அதுவும் சுகர் சேர்க்காமல் குடிக்கவேண்டும். அதேபோல் தண்ணீரும் குடிக்கவேண்டும்.
ஏழாம் நாள்
ஏழாவது நாள் காலையில் தண்ணீர் குடித்துவிட்டு காலை உணவிற்கு அரை மூடி தேங்காய் மற்றும் சுடு தண்ணீர் எடுத்து கொள்ளளவும். உங்களால் குடிக்கின்ற சூட்டில் இருந்தால் போதுமானது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.
எட்டாம் நாள்
எட்டாவது நாள் புதினா இல்லையென்றால் துளசி கலந்த தண்ணீர் குடிக்கவேண்டும். சர்க்கரை பால் இல்லாத கிரீன் டீ அல்லது இஞ்சி டீ குடிக்கலாம்.
ஒன்பதாம் நாள்
உடலில் உள்ள அனைத்து கெட்ட கொழுப்புகளும் குறைய தொடங்கியதால் வலிமை இழந்தது போல் காணப்படுவீர்கள். ஆகவே பசிக்கும் போது பழங்கள் சாப்பிடலாம். அதன் கூடவே சுடு தண்ணீரும் எடுத்துகொள்ளவும்.
பத்தாம் நாள்
சிட்ரிக் பழத்தின் ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். உதாரணத்திற்கு எலுமிச்சை ஜூஸ் ஆரஞ்சு ஜூஸ் எடுத்து கொள்ளவும். இதனை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றம் ஏற்படும். உடலுக்கு புதிய புத்துணர்ச்சி கிடைக்கும்.