மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா? உடல் எடை அதிகரித்து வெளியான காணொளி
உடல் எடை அதிகரித்துள்ளதால் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிமேகலை
பிரபல ரிவி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மணிமேகலை. தற்போது 4ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்நிகழ்ச்சியிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார்.
இவரின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி இவரின் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் என்று குழப்பத்திலும் காணப்படுகின்றனர். ஏனெனில் இவர் வெளியேற அதிகாரப்பூர்வமான காரணம் எதுவும் கூறப்படவில்லை.
அதன் பிறகு தங்களின் ஃபார்ம் ஹவுஸ் கட்டுமான பணிகளில் மணிமேகலையும் அவரது கணவர் ஹுசைனும் பிஸியாக உள்ளனர்.
கர்ப்பமாக இருக்கிறாரா?
இருவருமே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அவ்வப்போது பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்திலும், மிகவும் தளர்வான ஆடைகளை அணிந்துள்ளார். அதோடு தற்போது உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். இதனால் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.