வயது கடந்தும் திருமணம் கைகூடவில்லையா? இந்த திருத்தலத்திற்கு சென்று வாருங்கள்
நம் வாழ்வில் நடைபெறும் முக்கிய விடயங்களில் முக்கியமானதொன்றுதான் திருமணம். இவற்றில் சிலருக்கு வயது கடந்தும் திருமணம் ஆகாமலேயே இருக்கும்.
பொதுவாகவே திருமணம் குறித்து பலருக்கு பல கனவுகள் இருக்கும். அந்தக்கனவுக்கு சிக்கலாக வருவதே இந்த திருமணத்தடைதான்.
இவ்வாறு இருப்பவர்களுக்கு திருமண பாக்கியத்தை அள்ளி வழங்கும் சிறுவாபுரி முருகன் ஆலயம் சென்று வாருங்கள்.
சிறுவாபுரி முருகன் ஆலயம்
தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி பகுதியில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற கோவில் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும்.
மணக்கோலத்தில் காட்சி தரும் இது போன்ற சிலை வேறு எங்கும் கிடையாது. இந்த முருகப்பெருமானை வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கி மனம் போல துணை அமையும் என்பது மக்களின் ஐதீகம்.
மேலும், இத்திருத்தலம் தொடர்பான மேலதிக தெளிவான விடயங்களை கீழே உள்ள காணொளி மூலம் அறிந்துக்கொள்ளலாம்.