கண்டிஷன் கல்யாணம்.. ஒப்பந்த பத்திரத்துடன் நண்பனின் திருமணத்திற்கு வந்த நண்பர்கள்!ஷாக்கில் உறவினர்கள்
திருமணத்தின் பின்னர் மணமகள் எப்படி இருக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண சடங்கு
பொதுவாக திருமணங்கள் எல்லாம் பெரியவர்களின் தீர்மானத்திற்கமைய இரண்டு குடும்பத்தினர் ஒன்றிணைந்து செய்யும் ஒரு சடங்காகும்.
இந்த பந்தத்தில் இரு தம்பதியினர் மற்றவர்கள் போற்றும் அளவிற்கு பல ஆண்டு காலங்கள் சேர்ந்து வாழ்ந்து அவர்களின் பரம்பரையினருக்கு பெறுமை சேர்க்க ஆசைப்படுவார்கள்.
மேலும் தற்போது திருமணங்கள் வித்தியாசமான முறையில், ஆண் பெண் பேதம் இல்லாமல் இடம்பெற்றுக் கொண்டு வருகிறது.
அந்த வகையில் திருமணத்திற்கு பின்னர் நண்பனை எவ்வாறு பார்த்து கொள்ள வேண்டும் என்பதனை ஒரு ஒப்பந்தமாக தயார் செய்து மணமகளுக்கு கொடுத்துள்ளார்கள்.
ஒப்பந்த திருமணம்
இதனை சரியாக படித்து காட்டி இதற்கு சம்மதம் என்றால் என்னுடைய நண்பனை திருமணம் செய்து கொள்ளலாம் என நண்பர்கள் சேர்ந்து கலாய்த்துள்ளார்கள்.
மேலும் குறித்து மணப்பெண்ணும் ஒப்பந்தத்திற்கு சரி என தலையாட்டியப்படி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் திரைபடங்களில் பார்த்திருப்போம். மாறாக நிஜ வாழ்க்கையில் இவ்வாறு நடப்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சம்பவம் அங்கிருந்த உறவினர்களுக்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள், “ என்னடா பண்ணுறீங்க” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.