பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் தந்தை செய்த நெகிழ்ச்சியான செயல்! குவியும் வாழ்த்து மழைகள்!
பெண் குழந்தைகளை வெறுக்கும் சில நாகரீக உலகத்தில், பெண் குழந்தை பிறந்ததை விமரிசையாக கொண்டாடிய இருக்கிறார் பானிபூரி வியாபாரி.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சல் குப்தா(28). இவர் ஒரு பானிபூரி வியாபாரி. இதையடுத்து கர்ப்பமாக இருந்த இவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியில், பொது மக்களுக்கு பானிபூரியை இலவசமாக வழங்கி இருக்கிறார்.
சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பானிபூரிகளை அவர் வழங்கியுள்ளார். இதை பலரும் அதை வாங்கி சாப்பிட்டு வாழ்த்திவிட்டு சென்றனர்.
இதுகுறித்து, அஞ்சல் குப்தா கூறும்போது, ‘‘பிறக்கும் குழந்தைகளில் ஆண், பெண் என்று பேதம் பார்க்கக்கூடாது. இதை அனைத்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். இதற்காகத்தான் நான் எனது மகள் பிறந்ததை கொண்டாடும் வகையில் பானிபூரியை இலவசமாக வழங்கினேன்.
மேலும், பெண் குழந்தை பிறந்ததை அறிந்த சில உறவினர்கள், உனக்கு பொருளாதார சுமை ஏற்படும் என்று கூறினார்கள். ஆனால் அதை பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. பெண் குழந்தை பெற்ற அனைவருமே அதிர்ஷ்டசாலிகள் என்று தெரிவித்துள்ளார்.