டிவி பார்த்துக் கொண்டு சாப்பிட்டால் ஆபத்தா? இதில் இவளோ பிரச்சினை இருக்கா?
Weight Loss
By Rinosharai
பொதுவாக இன்று பலரும் டிவியையும், போனையும் பார்த்துக் கொண்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட மாதிரி இருக்கும்.
இந்தப் பழக்கம் சிறியவர் முதல் பெரியவர் வரை வளர்த்துக் கொண்டேதான் போய்க் கொண்டிருக்கிறது.
ஆனால் டிவியை பார்த்துக்கொண்டு சாப்பிட்டால் சாப்பிடும் உணவில் அதிக கவனம் இருக்காது. இவ்வாறு சாப்பிடுவதனால் நாமே சில நோய்களை விலைக் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.

என்ன விளைவுகள்?
- டிவியைப் பார்த்துக் கொண்டு சாப்பிட்டால் நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை கண்டறிய முடியாது.
- டிவியைப் பார்த்துக் கொண்டு சாப்பிடுவதால் அளவு தெரியாமல் சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க நாமே வழிவிடுகிறோம்.
- நோம் சாப்பிடும் போது போனையோ அல்லது டிவியைப் பார்த்துக் கொண்டு சாப்பிடும் போது கவனச்சிதறலால் ஒரே நேரத்தில் 10சதவீதம் அதிகமாக சாப்பிடுகிறோம் என ஆய்வு சொல்கிறது.
- அதுமட்டுமில்லாமல் சாப்பிடும் போது வேறு எங்காவது கவனத்தை செலுத்தினால் மற்றவர்களை விட 25சதவீதம் அதிக கலோரிகளை எடுத்துக் கொள்ள நேரும்.
- டிவியைப் பார்த்துக் கொண்டு சாப்பிடும் போது உங்கள் வளர்ச்சிதை மாற்றம் குறையும். இதனால் செரிமான பிரச்சினைகள் ஏற்படும்
- அதிக கவனச்சிதறல் ஏற்பட்டு மூளையானது சாப்பிடும் உணவை பதிவு செய்யாமல் அதிக பசியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
- ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்வதால் நமது மூளை ஏதாவது ஒன்றில் தான் கவனம் கொள்ளும் இதனால் இரண்டில் திருப்தியில்லாத தன்மை இருக்கும்.
-
தினமும் குடும்பத்துடன் அமரந்து பேசிக் கொண்டே தான் சாப்பிடுவோம் இதனால் டிவிகளையும் போனையும் பார்த்துக் கொண்டு சாப்பிடுவதால் உறவுகளில் பிரச்சினைகளும் ஏற்படும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US