அதிகமாக சிக்கனை உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன?
இறைச்சியில் பலரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனின் விலை மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடும் போது குறைவாக இருப்பதால் ஏழைகளுக்கும் எட்டும் உணவாக கோழி இறைச்சி இருக்கிறது.
மேலும், சிக்கன் சுவையானதாக இருப்பதோடு, சமைப்பதற்கு எளிதாகவும் இருக்கிறது. கொழுப்பு குறைவான சிக்கனில் புரதச்சத்து அபரிதமாக நிறைந்துள்ளது.
ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது, சிக்கனுக்கும் பொருந்தும். சிக்கனை தினமும் சாப்பிட்டால், உடலில் பல பாதிப்புகள் உண்டாகும். அதிக அளவில் சிக்கன் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும், இதய பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும், மனிதர்களுக்கு தேவையான தினசரி கலோரியில் 10 முதல் 35 சதவீதம் வரை புரதச்சத்து இருக்க வேண்டும். அதிகளவில் புரதச்சத்து உடலுக்குச் சென்றால் அது கொழுப்புக்களாக தேங்க ஆரம்பித்து, உடல் எடை அதிகரிக்கிறது.
அடிக்கடியோ, தினசரியோ சிக்கன் சாப்பிட்டால், அது உடலுக்கு தேவையானதைவிட மிகவும் அதிகமான புரதத்தை சேர்த்துவிடலாம். இதையடுத்து, தினமும் சிக்கனை சாப்பிடுவது, உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகரிக்கும்.
அது, இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டாலும், அதிக புரதம் உடலுக்கு சென்றாலும், அது மறைமுகமாக இதய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
சிக்கன் போன்ற விலங்கு அடிப்படையான புரதச்சத்தை அதிகமாக சாப்பிடுவது, உடல் எடையைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்படுத்தலாம். தினமும் இறைச்சி சாப்பிடுபவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் குறைந்த BMI கொண்டுள்ளனர்.